ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் 26ம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாக மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கை தரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சகலரது ஒன்றிணைந்த அர்ப்பணிப்பும் அவசியமென இதன்போது வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் இதற்கான தமது பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
சங்கத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்தலும் இதன்போது இடம்பெற்றதுடன், சங்கத்தின் புதிய தலைவராக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ரோஹண டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் முதல் அதில் கடமை புரிந்த சகலரது சேவையையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டியதுடன், புதிய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன, முன்னாள் செயலாளர் டப்ளியு.எம்.எம்.பி.வீரசேக்கர உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.