நேபாள ஜனாதிபதி அவர்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், இலங்கை அரசாங்கமும் மக்களும் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நேபாள பாராளுமன்றத்தினால் திருமதி.பிந்தியா தேவி பண்டாரி மீ்ண்டும் நேபாள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமையானது அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி. பிந்தியா தேவி பண்டாரியின் தலைமைத்துவத்தின் கீழ் நேபாள அரசாங்கமும் மக்களும் நல்லாட்சி, சமாதானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்ள இயலுமானதாக அமையும் என்றும் இலங்கைக்கும் நேபாளத்திற்குமிடையே பல தசாப்தங்களாக நிலவிவரும் கலாசார, கல்வி மற்றும் சமய ரீதியான தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு அவருடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.