ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், அவரது இந்த மகத்தான வெற்றி ரஷ்ய மக்கள் விளாடிமீர் புட்டினின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் முதிர்ச்சி தொடர்பில் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதி செய்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் முற்போக்குத்தன்மையுடன் வலுவானதாக முன்னோக்கி கொண்டுசெல்ல எதிர்பார்ப்பதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளினதும் பொதுவான அபிலாசைகளை அடையும் பொருட்டு பிராந்திய மற்றும் பல்தரப்பு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இரு நாடுகளுக்கும் வாய்ப்புள்ளது எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.