ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அந்நகரின் நகர பிதாவினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹிரோசிமா நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், அங்குள்ள நூதனசாலையையும் பார்வையிட்டார்.
ஹிரோசிமா நகரின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி முதலாவது அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் காரணமாக இந்த நகரம் 90 வீதம் அழிவுக்குட்பட்டதுடன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரேநேரத்தில் உயிரிழந்தனர். அவ்வருட நிறைவில் மரணித்தவர்களின் எண்ணக்கை 1,40,000 ஆக அதிகரித்தது.
இந்த அனர்த்தம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு சில நிமிடங்கள் உணர்வுபூர்வமாக இருந்தார்.
அப்பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.