பௌத்த மதத்தின் மேம்பாட்டிற்காக ஜப்பானிலிருந்து குறித்த தேரர்கள் ஆற்றிவரும் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவர்களை சந்திக்க கிடைத்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இளம் தலைமுறையினருக்கு எமது கலாசார விழுமியங்களை தெளிவுபடுத்தி அவர்களை சிறந்த விழுமியப் பண்புகளையுடைய தலைமுறையாக கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், சமயத் தலைவர்களுக்கு இதில் பாரிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அதன் பின்னர் முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரும் டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.
யார் எவ்வித குற்றச்சாட்டுக்களை சுமத்தியபோதிலும் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அர்ப்பணிப்பு சிறப்பானதாகும் என்றும், அச்செயற்பாடுகளுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தரத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அண்மையில் கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், 2015 ஜனவரி 08ஆம் திகதி இன, மத பேதமின்றி சகல இலங்கையர்களும் இணைந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய பெரும் எதிர்பார்ப்பே காரணமாகும் என தெரிவித்தனர்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாறசிங்ஹ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
{jathumbnail off}