நிர்மாணத் துறையில் சிறந்து விளங்கிய 8 பேர்களுக்கான விசேட விருதுகளை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
தேசிய ஒப்பந்தக்காரர்களினால் வெளிநாட்டு கருத்திட்ட நிர்மாணப் பணிகளை ஊக்குவித்து, பாராட்டுவதற்காக இம்முறை சேர்த்துக்கொள்ளப்பட்ட 3 புதிய விருதுகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.
நிர்மாணத்துறை மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்கான சுற்றாடல் வழிகாட்டல் சஞ்சிகை வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எம். அபேரத்ன, நிர்மாணத்துறை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஆர். ஜயவர்தன, நிர்மாணத் துறை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கட்டிடக் கலைஞர் எச்.கே. பாலசந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.