ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று 13ம் திகதி முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
சுபீட்சமான புதியதோர் யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் வகையில் ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் வீண்விரயங்களுக்கெதிரான விரிவான அரசியல் மற்றும் சமூக கலாசாரத்தை கட்டியெழுப்புதல், ஆட்சிமுறைமையை வலுப்படுத்தல், சட்ட முறைமையையும், சட்ட நிறுவனங்களையும் முறைப்படுத்துதல் இந்நிகழ்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
இலங்கை தேசத்தின் தற்போதைய சவால்கள் குறித்த தெளிவுடன் நவீன தேசமாக எழுந்திருப்பதற்குத் தேவையான சக்தியை வழங்கி ஊழல், மோசடியற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி அவர்களின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் வீண்விரயங்களை நாட்டிலிருந்து ஒழித்து நாட்டை சுபீட்சமானதொரு தேசமாக கட்டியெழுப்பும் மக்கள் அரணின் ஒரு தூணாக இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்படுவதுடன், இது தொடர்பாக தமது பெறுமதியான கருத்துக்கள், முன்மொழிவுகளை 2018 மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் ‘ஊழலுக்கெதிரான தேசிய நிகழ்ச்சித் திட்டம்’, ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு – 1 என்ற முகவரிக்கு அல்லது 011 2431502 என்ற தொலைநகலின் ஊடாகவோ அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலினூடாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 076 4654600 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு அல்லது 077 5770882 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஏ.என்ஆர். அமரதுங்கவை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.