நாடு , மதம் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணத்திற்காகவும் கல்விக்காகவும் இவர் அளப்பரிய சேவையாற்றியவராவார். தமிழ் முஸ்லிம் மக்களைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் சமாதானம் தொடர்பாக இவருடன் இணைந்து இணக்கமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.
நாட்டின் பௌத்த மதத்திற்கும் பிரிவினா கல்விக்கும் விசேடமாக பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கும் பெரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இவர் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரராக பணியாற்றி உன்னதமான சேவையை வழங்கியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் காலமானார். இறக்கும் போது இவருக்கு 76 வயதாகும்.
இவரது பூதவுடலுக்கு ஜனாதிபதி , பிரதமர் , அமைச்சர்கள் புத்திஜீவிகள் , இந்து மத குருக்கள் , கிறிஸ்தவ மதகுருமார், கலாநிதி அப்துல்லா உமர் நசீவ் , ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி, கலைஞர்கள், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பல எண்ணிக்கையிலானோர் அஞ்சலி செலுத்தினர்.