பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்தை நட்புறவுடன் சுமூகமான முறையில் நடைபெற்றுள்ளது.

சிங்கப்பூரின் கூட்டுமுயற்சியின் மூலம் வர்த்தக நடவடிக்கைளை மேம்படுத்த முடியும். முதலீடு போன்றவற்றிலும் கூட்டாக செயற்படுவதன் மூலம் முக்கிய அபிவிருத்தி துறைகளில் பங்களிப்பு செய்யலாம் என்று சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டார்.

இதன் போது சிங்கப்பூரில் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ள சர்வதேச தண்ணீர் வாரம் உலக நகர மாநாடு மற்றும் தூய்மையான சுற்றாடல் மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிங்கப்பூர் பிரதமர் அழைப்பவிடுத்துள்ளார்.

இந்த அழைப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுகொண்டார். மேலும், சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறும் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.