இதற்கமைவாக சிங்கப்பூர் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

சிங்கப்பூர் பிரதமரின் இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமரின் பாரியார் திருமதி லீ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் , வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.