மேலும் வீதியோர சித்திரக் கலைஞர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் என்றவகையில் தேவையான சகல உதவிகளும் வழங்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு வீதியோர சித்திரக் கலைஞர் சங்க உறுப்பினர்களுடன் 16ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
தமது படைப்பாற்றல்களினால் மக்களை ஆற்றுப்படுத்தும் தங்களுக்கு நாட்டின் ஜனாதிபதி ஒருவரை சந்திப்பதற்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென தெரிவித்த வீதியோர சித்திரக் கலைஞர் சங்க உறுப்பினர்கள், தேசிய கலாசாரப் பண்புகளை பாராட்டும் கலையார்வம்மிக்க அரச தலைவரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தமது துறைசார் செயற்பாடுகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
சுற்றுலா பிரயாணிகள் வருகைத்தரும் பிரதேசங்களில் தமது படைப்புக்களைக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்ளல், இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்தல், இலங்கை அருங்கலைகள் பேரவையில் பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ளல், கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உதவிகளை பெற்றுக்கொள்ளல், தமது படைப்புக்களை காட்சிப்படுத்தும் பிரதேசங்களின் நகர அலங்காரத்திற்கு முழுநேர பங்களிப்பினை வழங்குபவர்களுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட தமது பல கோரிக்கைகளையும் இவர்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்தனர்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்து வடக்கு, தெற்கு பிரதேசங்களை ஒன்றிணைக்கும் நல்லிணக்க செயற்பாடுகளில் வழங்கக்கூடிய தமது பங்களிப்பினையும் அவர்கள் சுட்டிக்காட்டியதுடன் சகல துறையினரையும் தெளிவுபடுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
கொழும்பு வீதியோர சித்திரக் கலைஞர் சங்கத்தின் அலுவலக வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியுதவிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் ஏ.சி. நுவன், செயலாளர் விஷ்வஜித் யஷேரா, பொருளாளர் லக்ஷமன் திசாநாயக்க மற்றும் பிரதிநிதிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.