நான்கு வழிப்பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும். இதற்காக 471 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 ஆம் ஆண்டு இதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பமானது.

இவ்வருடம் டிசெம்பர் மாதத்தில் ,ந்த மேம்பாலத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பணியாளர்களினதும், பிரதேசவாசிகளினதும், ஏனைய தரப்புக்களினதும் ஒத்துழைப்பு காரணமாக ,தனை ஜனவரி மாதத்தில் திறக்க முடிந்துள்ளதாக செயற்றிட்டப் பணிப்பாளர் பியல் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ஊயர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இரும்பின் மீது கொங்கிறீட் போடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மேம்பாலமும் மற்றும் மிக அலங்காரமான மேம்பாலமும் இதுவாகும்.

இதனுடன் இணைந்ததாக பல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

நாரஹன்பிட்டி நோக்கி பயணிப்பதற்கான மாற்றுவழி பாதையும் , புத்கமுவ நோக்கி செல்லக்கூடிய மூன்று வாகன வெளிப்பாதைகளை கொண்டதாகவும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதன் பின்னர் பத்தரமுல்லைக்கும், பொரளைக்கும் இடையிலான வாகன நெரிசல் பெருமளவில் குறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.