இக்கைச்சாத்திடும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்றது.
அரசியல் அமைப்பின் படி நியாயமான பக்கச்சார்பற்ற தேர்தலை நடத்துவது இந்த ஊடக நெறிமுறைகளின் நோக்கமாகும்.
ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ள இந்த நெறிமுறைகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதும் அது சட்டபூர்வமாகிவிடும்.
இந்த ஊடக நெறிமுறைகளுக்கு கட்டுப்படுவது அனைத்து ஊடகங்களினதும் பொறுப்பும், கடமையுமாகும். இது நல்லாட்சியின் மற்றுமொரு வெற்றியாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபயவர்தன, சாகல ரத்னாயக்க , ரவூப் ஹக்கீம், மனோகணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.