இவரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சா திலக்க மாரப்பன தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் பிரதமரை வரவேற்பதற்கான விசேட வைபவம் ஒன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இவருடன் திங்கட்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பம்இ புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. இந்த உடன்படிக்கையின் மூலம் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராஜதந்திர பயிற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கிடையிலான இரஜதந்திர உறவுகள் 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு விசேட முத்திரை ஒன்றும்; கடித உறையொன்றும் வெளியிப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மலேசிய பிரதமர்இ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.


இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார புரிந்துணர்வு மற்றும் வர்த்தகம் முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

மலேஷிய பிரதமர் இலங்கை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் வட்டமேசை பேச்சுவார்த்தையிலும் பங்குகொள்ளவுள்ளார்.