இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது ,

சித்தி மொஹமட் பாரூக் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் ஹொங்கோங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பட்டதாரியுமாவார். நடமாடும் தொலைத்தொடர்பு துறையில் நிபுணத்துவம் கொண்ட இவர் இலங்கையின் முன்னணி நிறுவனமான Panasian Power PLC நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியாக 2009ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்தார்.
மேலும், அவர் சகவாழ்விற்காக அயராது பாடுபட்ட சிவில் செயற்பாட்டாளருமாவார். 2017ம் அண்டு ஜுன் மாதத்திலிருந்து சித்தி மொஹமட் பாரூக் அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் கடமை புரிந்தார்.
மறைந்த எஸ்.எம். பாரூக் அவர்களின் புதல்வாரன அவர் முன்னால் மாகாண சபை உறுப்பினருமாவார்.