தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் அங்கிருந்து இன்று (30) காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுதுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அம்மக்களை இடர்நிலைமைகளில் இருந்து மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முப்படையினரை ஈடுபடுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.
சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள மீனவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
திடீர் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்ப உதவியாக 10.000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் தலைமையில் அனைத்து கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (30) பிற்பகல் இடம்பெறவுள்ளது.