“உடல், உள மற்றும் அறிவியல் ரீதியில் பாலியல் மருத்துவத்தின் புதிய எல்லைகள்” எனும் தொனிப்பொருளில் இன்று முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய விசேட நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
பாலியல் சுகாதாரத்துடன் தொடர்புடைய புதிய மருத்துவ முறைகள் பற்றிய விரிவுரைகள் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளதுடன், பாலியல் சுகாதாரம் சம்பந்தமான மருந்துகளின் அண்மைக்கால முன்னேற்றம் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளன.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இதற்கு முன்னர் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூவருக்கு இதன்போது ஜனாதிபதி அவர்களால் விருது வழங்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் லசந்த மளவிகே, சர்வதேச மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் Luca Incrocci மற்றும் மருத்துவர் இயந்தி அபேவிக்ரம உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.