நாளை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் இடம்பெறுவதுடன் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதம் தொடங்குகிறது.

இந்த விவாதம் டிசெம்பர் 9ஆம் திகதி வரை காலை 9.30 தொடக்கம் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் விவாதிக்கப்படவுள்ளது.

நாளை ஜனாதிபதி, பிரதமர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள், அரச ஆணைக்குழுக்கள், பாராளுமன்றம், ஆளும் கட்சி அமைப்பாளர், எதிர்க்கட்சி அலுவலகம் உள்ளிட்ட 27 துறைகள் சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளன.