இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் இம்மாநாடு, இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுவதுடன், 42 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
சிறுவர் நோய் தொடர்பான சர்வதேச மட்டத்திலான அறிவை பகிர்ந்துகொள்வதற்கும், ஆய்வுகளை முன்வைக்கவும், தரங்களை அறிமுகப்படுத்தவும் இம்மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் சிறுவர் நோய் தொடர்பான மருத்துவ விஞ்ஞான நிறுவனம் இம்மாநாட்டிற்கான வசதியளிப்புகளை வழங்குகிறது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறுவர் சுகாதார, சிறுவர் நோய் தொடர்பான உலக காங்கிரஸ் தலைவர் வைத்தியர் மெனுவல் காட்ஸ், இலங்கை சிறுவர் நோய் தொடர்பான மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ, ஆசிய பசுபிக் சிறுவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் இஸ்மாயில் துல்கிப்லி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.