மருத்துவம், விவசாயம் மற்றும் பொறியியல் துறைகளில் 2015 ஆம் ஆண்டில் உயர் நியமங்களுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுப்பட்ட 200 பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு பிரசுரங்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கல் விழா இம்முறை 10வது தடவையாக இடம்பெறுவதுடன், இதனை தேசிய ஆய்வுகள் பேரவை ஒழுங்கு செய்துள்ளது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, தேசிய ஆய்வுப் பேரவையின் தலைவர் பேராசிரியர் ஜானக்க டி சில்வா, நிறைவேற்றுச் செயலாளர் மனிஷா ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.