ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் மூலம் பல்கலைக்கழக வைத்திய பீடம், பீடாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்வைத்த சிபார்சுகளை கவனத்திற் கொண்டு அனைத்து தரப்பினருக்கும் நீதியான வகையிலும், அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக சிபார்சுகளை முன்வைத்துள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்கி மீண்டும் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலும் ஜனநாயகத்தை மதிக்கும் வகையிலும் இந்த உத்தேச தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் இந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பீடம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையினை தீர்த்து வைப்பதற்காக வேண்டி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட தீர்ப்புகள் அடங்கிய ஊடக அறிக்கை.

சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பீடம் (ளுழரவா யுளயை ஐளெவவைரவந ழக வுநஉhழெடழபல யனெ ஆநனiஉiநெ) தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி குழுவின் மூலம், அரச பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள் உட்பட பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை கவனத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்ககூடிய மற்றும் அரச கொள்கைகளுக்கு உட்பட்ட நிரந்தர தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்காக பின்வரும் யோசனைகளை முன்வைக்கின்றது.

இப்பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள தடைகளில் இருந்து நீக்கி, மீண்டும் மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்றச் செய்வதற்கு வாய்ப்புக்களை செய்து கொடுத்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து இம் மும்மொழியப்பட்டுள்ள முடிவுகளை செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புகளை நல்குவது காலத்தின் தேவையாகும்.
அனைத்து தரப்பினருக்கும் சாதாரண முடிவொன்று என்ற மூலதர்மத்தின் அடிப்படையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

01. சைட்டம் நிறுவனத்தினை (தற்போதிலிருந்து சைட்டம் என்று இனங்காண்பது அதன் மருத்துவ பீடமாகும்) இல்லாதொழித்தல். தற்போதிருக்கின்ற பங்குதாரர்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இலாபம் நோக்கமற்று, சைட்டம் மருத்துவ பீடத்தின் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவ செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற, புதிய நிறுவனத்தினை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்கின்ற வகையில், சைட்டம் நிறுவனத்தில் காணப்படுகின்ற உரிமையாண்மை மற்றும் முகாமைத்துவ கட்டமைப்பு என்பவை இல்லாதொழித்தல் இடம்பெறும். இங்கு, வைத்தியர் நெவில் பிரனாந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் இலாப நோக்கத்துடன் முன்னெடுத்து வந்த நிறுவனம் இல்லாதொழிக்கப்படுகின்றது.

02. இப்பங்குதாரர்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தத்தின் மூலம் சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி தொடர்பில் காணப்படுகின்ற ஆகக் குறைந்த தரத்தின் அடிப்படையில் (சட்டமயமாக்கப்பட வேண்டும்) ஸ்தாபிக்கப்பட உள்ள மருத்துவ பட்டமளிக்கவுள்ள முன்மொழியப்பட்டுள்ள புதிய அரச சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற (செலவினை மிஞ்சிய இலாபம் பெறப்படும் போது அதனை பங்குதாரர்களிடத்தில் பிரித்துக் கொள்ளாது நிறுவனத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு அல்லது மாணவர்களுக்கு பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தல்) நிறுவனத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.

03. இந்நோக்கத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற நிறுவனத்தினை ஸ்தாபிப்பதற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற தரப்பினர்களுடன் அரசாங்கம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் விருப்பம் தெரிவிக்கின்ற தரப்பினர்களுடன் மிகவும் துரித கதியில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

04. தேவையான தகைமைகளை கொண்ட, தற்போது சைட்டம் நிறுவனத்தின் மூலம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்களை புதிய நிறுவனமானது ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்தாபிக்கப்பட உள்ள புதிய நிறுவனத்தினுள் இம்மாணவர்களுக்கு மருத்துவ கல்வியினை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.

05. சைட்டம் நிறுவனத்தில் மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள், அது தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை மருத்துவ சபையின் ஆலோசனையின் பெயரில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். சைட்டம் நிறுவனத்தில் மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சிபார்சு செய்யப்படுகின்ற அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படும்.

06. உயர் கல்வி அமைச்சின் செயலாளரினால் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி வெளியிடப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் சைட்டம் நிறுவனத்துக்கு புதிதாக மாணவர்கள் இணைத்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்விடைநிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதனடிப்படையில், இதன் பின்னர் அனைத்து புதிய அனுமதிகள் மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகள் தொடர்பான ஆகக் குறைந்த தரத்தின் அடிப்படையில் (சட்டமாக்கப்பட வேண்டும்) ஸ்தாபிக்கப்பட உள்ள முன்மொழியப்பட்டுள்ள புதிய நிறுவனத்தினால் மாத்திரமே ஆகும். (மேற்கூறப்பட்ட 02ம் இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களில் தகைமை பெறுகின்ற மாணவர்களுக்கு வகுப்புக் கட்டணங்களுக்காக செலவிடப்படுகின்ற தொகையினை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி நிதி நிறுவனங்கள் மற்றும் சலுகை அடிப்படையிலான மாணவர் கடன் திட்டங்களின் மூலம் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து வசதிகளை அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்.

07. புதிய நிறுவனத்தின் உரிமை மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்காக சைட்டம் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் தொடர்புபடக் கூடாது. இது தொடர்பில் வைத்திய நெவில் பிரனாந்து அவர்கள் மற்றும் அக்குடும்பம் வழங்குகின்ற ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாகும்.

08. இலங்கை மருத்துவ சபை, சட்டமாதிபர் மற்றும் ஏனைய உரிய பங்குதார்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை மருத்துவ சபை முன்வைத்த சட்டமூலத்துக்கு அமைவாக மருத்துவ கவ்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான ஆகக் குறைந்த தரமானது சுகாதார அமைச்சின் மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட உள்ளதுடன், பின்னர் அவை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இது இன்றிலிருந்து கட்டாயமாக ஒரு மாதத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும்.
பின்வரும் ஒழுங்கு முறையின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

01. ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான ஆகக் குறைந்த தரமானது சுகாதார அமைச்சின் மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்ட வேண்டும்.

02. முன்மொழியப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற நிறுவனத்துக்கு சொத்துக்கள், பொறுப்புக்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை ஒப்படைப்பதற்காக சைட்டம், தெரிவு செய்யப்பட்ட தரப்பினர் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒப்பந்தத்துக்கு வர வேண்டும்.

03. உயர் கல்வி அமைச்சின் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் புதிய நிறுவனத்தினை ஸ்தாபித்தல்.

04. சைட்டம் நிறுவனத்தினை இல்லாதொழித்தல்: சைட்டம் நிறுவனத்துக்கு உரித்தான சொத்துக்கள், பொறுப்புகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் புதிய நிறுவனத்துக்கு ஒப்படைத்தல்.

05. மருத்துவ பட்டத்தினை வழங்கும் புதிய, இலாப நோக்கமற்ற நிறுவனத்தினை ஆரம்பித்தல்

மேற்கூறப்பட்ட செயற்றிட்டங்களை செயற்படுத்துவதை ஒருங்கிணைப்பதற்காக உயர் மட்டத்திலான அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை துரித கதியில் நியமிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முழு செயன்முறையும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக கட்டாயமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன
அரசாங்க தகவல்திணைக்கள பணிப்பாளர் நாயகம்