அரசியல் யாப்பொன்றை உருவாக்க அரசாங்கம் செயல்படுவதன் மூலம் நாடு பிளவுபடப்போவதாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறமான செய்திகளை வெளியிவத கவலைக்குரிய விடயம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.


பெருந்தோட்டப் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றும் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடுகளுக்குரிய 'பசுமை பூமி - காணி உறுதிகளை' வழங்கும் நிகழ்வில் பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இந்நிகழ்வு இன்று பிற்பகல் ஹட்டன் 'டன்பார்' மைதானத்தில் நடைபெற்றது. அங்கு 2864 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.


இன்று இந்த நாட்டு மக்களுக்கு சக வாழ்வே தேவைப்படுகின்றது. அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டுமென விரும்புகின்றனர். மக்கள் 2015 ஆம் ஆண்டு அதற்காகவே ஆதரவு வழங்கினார்கள். பெரும்பான்மை சிங்களவர்கள்இ பெரும்பான்மை முஸ்லிம்கள். பெரும்பான்மை பறங்கியர்கள், என அனைவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை தெரிவு செய்து எங்களை ஒன்றிணையுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். நாம் அனைவரும் ஐக்கிய இலங்கையை உருவாக்க இணைந்துள்ளோம். அதற்காகவே நாம் செயல்படுகின்றோம். புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பாகவும் சிலர் பேசுகின்றனர. இது எதனையும் நாம் செய்யவில்லை. அதற்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. துரதிஷ்டவசமாக ஊடகங்கள் நாட்டை பிளவுப்படுத்தும் யாப்பென கூறுகின்றன. அவ்வாறு எதுவும் இல்லை. இந்த நாட்டை பிரிப்பதற்கு எவரும் விரும்பவில்லை. எமது இறைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்லவே அனைவரும் எதிர்பார்க்கின்றனர் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து தொடர்ந்தும் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை இது ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க. உரையாற்றுகையில் நாட்டின் வருவாய்க்கு முதுகெலும்பாக விளங்கும் மலையக பெருந்தோட்ட மக்களுக்கான தனிவீட்டுத் திட்டத்தின் காணி உறுதி வழங்கும் நிகழ்வில்இ காணி அமைச்சராக கலந்து கொண்டதையிட்டு பெருமையடைகிறேன் என்றார்.


அமைச்சர் பி.திகாம்பரம்இ கல்வி ராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன்இ பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்இ உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.