அண்மையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற 'வியன் மக' எனும் பெயரிலான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிகாரியொருவர் புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை கொலைசெய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். 1988- 1989 வன்முறை யுகத்தை மீண்டும் நினைவூட்டிய அவர் தேசத்துரோகிகளுக்கு மரணமென முத்திரை குத்தி அதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவ்வாறு கொலை செய்யப்படுவோரின்; பூதவுடல்களின் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை எடுக்கக் கூடாதெனவும் மரியாதை செலுத்தக் கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான மிகப்பயங்கரமான கருத்தொன்றை கூறியிருப்பது இந்த நாட்டிலுள்ள 63 இலட்சம் மக்களினால் இலங்கையில் நீடித்த அமைதி , நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி கருதி புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்க வேண்டுமென 2015 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியிருந்த நிலையிலாகும். மக்கள் சார்பு ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் தலைமையிலான இணக்க அரசாங்கம் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையிலாகும்.

இரு பிரதான தலைவர்களும் நாட்டினதும் , உலகினதும் நம்பிக்கையை வென்று ஜனநாயக வழியில் முன்னோக்கிப் பயணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜனநாயக விரோத அதிகார மோக , தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் பித்து பிதற்றல்களை இந்த நாட்களில் கேட்கின்ற பல்வேறு பட்ட கருத்துக்களை பார்க்கும் போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இனவாத மலகூடவாயிலிருந்து வெளியாகும் அசிங்கமான கருத்துகளுக்கு பதிலளிக்காமலிருப்பது மேல். எனினும் இறந்த உடல்கள் மீது துள்ளிக்குதித்து இரத்தத்தை சுவைக்க முடியாமையால் பித்துப்பிடித்தித்திருக்கும் இரத்த தாகம் கொண்டோரது குமுறல்களுக்கெதிராக ஜனநாயக வாதிகளுக்கு ஒன்றை குறிப்பிட வேண்டும்.

கோதாபய ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்த 'வியன் மக' திட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனவும் இது நாட்டுக்கு விபரீதமொன்றினை கொண்டு வருவதற்கான முயற்சியெனவும் ஆரம்ப நாட்களிலே நான் கூறியிருந்தேன். அது அவர்களாலே தற்போது நாட்டில் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வெள்ளை வேன் கலாசாரத்தின் தேசிய ஸ்தாபகரான கோதபாய ராஜபக்ஷவின் கொடூர வன்முறையின் எல்லையற்ற கனவு இன்னும் முற்றுப்பெறவில்லை. அவர்களாலே உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ள இவ்வாறான இரத்ததாகம் கொண்ட அமைப்புகளின் கருத்துகள் மூலம் அவர்களது உண்மை உருவம் மென்மேலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கமல் குணரத்ன என்பவர் தமது 'நந்திக்கடல்' எனும் நூலில் வடக்கில் அப்பாவி பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள், கொள்ளைகள் தொடர்பாக குறிப்பிட்டு இலங்கை இராணுவத்தை வெளிப்படையாகவே விமர்சித்ததோடு அவ்வாறான நிகழ்வுகளை பார்த்து தமது மோசமான ஆசைகளை பூர்த்தி செய்து கொண்ட முறை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.அது மாத்திரமன்றி அவர் தூதுவர் சேவையில் இணைந்திருந்தவேளை இலங்கை ஊழியரொருவரது மர்ம மரணம் தொடர்பாக அவருக்கெதிரான விசாரணைகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் தமது எஜமானின் இரத்ததாக ஆசையை நிறைவேற்றுவதற்கு அவர் இவ்வாறு செய்வது பாதுகாப்பு படைக்கெதிராக ஒருசிலர் கொண்டு வருகின்ற யுத்தக்குற்றங்களுக்கு தர்க்க பூர்வமான பின்புலன்களை உருவாக்குவதாக இல்லையா?

இனவாதியாக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சரத் வீரசேகரவும் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்போரை கொலை செய்ய வேண்டுமென கூறியிருப்பது கோதாபய ராஜபக்ஷவின் நன்றியுள்ள பேச்சாளரென்ற வகையிலாகும்.

இனவாதத்தை தமது அரசியல் உபாய மார்க்கமாக கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியாதவாறு பாராளுமன்றத்துக்கு குண்டெறிய வேண்டுமென குறிப்பிட்டிருக்கிறார். அவர் அன்று பாராளுமன்றத்துக்கு குண்டு வீசிய தமது மைத்துனரின் முன்மாதிரிக்கமைய 88-89 யுகத்தை மீளவும் இந்த சமூகத்துக்கு நினைவூட்ட முயற்சிப்பது தமது வெறி அரசியல் முட்டாள் தனத்தை வெளிப்படித்தியவாறாகும்.

அரச அதிகாரமற்ற சிவில் தளமொன்றிலிருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை கருத்துக்களை வெளியிட முடியுமாயின் அரச அதிகாரத்தோடு உத்தியோகபூர்வ நிறுவனமொன்றில் இருந்து கொண்டு எவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளுமென சுய புத்தியுள்ளவர்களுக்கு அனுமதிக்க முடியும்.

அது மாத்திரமன்றி தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவான ஜனநாயகத்தை நேசிக்கின்ற புத்தியுள்ள மக்களது வாழ்க்கைக்கு ஆபத்து எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

' காடு மாறினாலும் புலியின் புள்ளி மாறாது' என்பதை நினைவூட்டுவதோடு இந்த கொடூர குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்கள் மனித கொலையாளிகள் எனவும் இரத்த தாகமுடையோரெனவும் சமூகத்தவரிடையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வெள்ளைவேன்களில் வந்து பல்வேறு கொலைக்குழுக்களைப் பயன்படுத்தி பொதுமக்கள், ஊடகவியலாளர்களை கடத்தி காணாமலாக்குகின்ற இரகசிய கொலைக்குழுக்களை வழிநடத்திய ராஜபக்ஷ யுகத்தை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.

இந்த நாட்டிலுள்ள 64 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புதிய அரசியலமைப்பைக் கோரியது அவ்வாறான வன்முறை நிர்வாகமொன்று மீண்டும் உருவாவதை தடுப்பதற்காகும். ஒரு முறையன்றி இரு முறை அந்த கொடிய ஆட்சியாளர்களை தோற்கடிக்கச் செய்தது அந்த கொடூரத்தை நன்கு அனுபவித்ததனாலாகும்.எனவே மீண்டும் அவர்களுக்கு இடமளிக்க வேண்டியதில்லை.

இலங்கையில் சமாதான நல்லிணக்கத்தை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தித் திசையை திருப்பும் காரியத்தை தடுத்து நிறுத்த முடியாதென்பதையும் கூறிக்கொள்கிறோம். அதே போன்று ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்துகக் கொண்டு இரத்த தாகம் கொலை வெறி பிடித்த சக்திகளை மீண்டும் தோல்வியடையச் செய்வதற்கு நாம் தயார் என்பதை குறிப்பிடுகிறோம்.