மகாசங்கத்தினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நன்கொடைகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வசதிகுறைந்த பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
திறைசேரி நிதியத்தின் கீழ் பராமரிக்கப்படாது பல்வேறு நன்கொடையாளர்களின் பங்களிப்பின் மூலம் வளம்பெற்றுவிளங்குவது இந்த மறுமலர்ச்சி நிதியத்தின் சிறப்பம்சமாகும்.
சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரர், சங்கைக்குரிய பெல்பொல விபஸ்ஸி தேரர் மீகஹதென்ன சந்திரசிறி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் வர்த்தகர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.