இதனடிப்படையில் இந்த வங்கியின் நிறைவேற்று முகாமைத்துவ பணிப்பாளர் திரு.தடசி மீடா தலைமையிலான குழுவொன்று இது குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை வருகைதரவுள்ளது.

தற்சமயம் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க விஜத்தில் ஈடுபட்டுள்ள நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினருக்கும் , சர்வதேச ஜப்பான் வங்கிக் கூட்டுத்தாபன வங்கி அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.