சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆயினும் 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நாட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்புதை குறுகிய காலத்தில் செய்துவிடமுடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை கூட்டத்தில் இன்று (20) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி நாட்டில் வாழும் பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பி சந்தேகம், நம்பிக்கையீனம், பழிதீர்க்கும் உணர்வு மற்றும் குரோதத் தன்மையினை நீக்கி அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டு நடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை மேம்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வறுமையிலிருந்து விடுபடும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு வரையான தெளிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டத்தை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்தை பலப்படுத்தி வறுமையிலிருந்து விடுபடும் அந்த பாரிய தேசிய செயற்திட்டத்தில் புதிய செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி, 2025ஆம் ஆண்டுவரை நாம் அமுல்படுத்த எதிர்பார்க்கும் பொருளாதார திட்டம், நாட்டில் பொருளாதார புத்தெழுச்சியையும் சுபீட்சத்தையும் அடைவதற்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென நான் நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை

அனைவருக்கும் மாலை வணக்கங்கள்,


அனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களே, 72ஆவது மாநாட்டில் விசேடமாக புதிய செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நல்வாழ்;த்துக்கூறி எனது உரையினை ஆரம்பிக்க வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் மூன்றாவது தடவையாகவும் இந்த சபையில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த 72ஆவது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருப்பது, பேண்தகு உலகில் அனைத்து மனிதர்களும் கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்காக எடுக்கும் முயற்சியாகும். இன்று உலகில் நிலவும் பல்வேறு நிலைமைகளை கருத்திலெடுக்கும்போது மிகவும் காலத்துக்குகந்த தலைப்பு இதுவெனக் கூறமுடியும். 2015 ஜனவரியில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருதேன். அவ்வாறு தெரிவு செய்யப்பட முன்னர் எனது அன்புக்குரிய நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தேன். அதில் நான் விசேடமாக குறிப்பிட்ட விடயம், உலகில் எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அதிகாரங்கள் இலங்கையின் அரச தலைவருக்கு இருப்பதனால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அதிகாரங்களை ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக்கி நாட்டின் பாராளுமன்றத்திற்கு ஒப்படைப்பதான வாக்குறுதியாகும்.
ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்.
ஜனநாயகத்தை பாதுகாத்து போசிக்கும் நாடுகளில் ஆட்சிக்குவரும் தலைவர்கள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அதிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். ஆயினும் கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும்;போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பாமை காரணமாக அந்த நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வேறு விதமான பிரிவுகளுக்கும் கரணமாக இருப்பதனைக் காணமுடிகின்றது. அவ்வாறான வரலாற்றுத் தகவல்கள் பற்றிய, உள்நாட்டு வெளிநாட்டு ஏராளமான அனுபவங்கள் எமக்கு இருக்கின்றன.
அவ்வாறான நிலைமையில் எனது நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டுநடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டில் மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை மேம்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துள்ளேன் என்பதை இந்த கௌரவம் மிக்க சபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
2017 ஆம் ஆண்டு எமது நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும்; ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்காக எமது நாடும் முழு உலகமும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வறுமையிலிருந்து விடுபடும் நாடாக எனது நாட்டை பிரகடனப்படுத்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கையில் 30 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாட்டைப் பிரிப்பதற்கு போராடிய பயங்கரவாதிகளைத் தோற்கடித்து சுதந்pரமான ஜனநாயக நாடாக இயங்க எம்மால் முடிந்துள்ளது. பொருளாதார பின்னடைவுகளுடன் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகளில் கற்றுக்கொண்ட பாடங்களுடன் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கி பயணித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக தேசிய பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில் மயமாக்கலில் நாம் புதிய அத்தியாயத்தை திறந்துள்ளோம். இந்த அபிவிருத்தி செயற்பாடுகளின் போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவது எனது அரசின் முக்கியமான குறிக்கோளாக இருக்கின்றது.
இன்று, எனது நாடு உட்பட உலகம் முழுவதிலும், அமெரிக்காவிலும் கூட வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் பாராதூரமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதனை விசேடமாக இவ்வேளையில் குறிப்பிட்டே ஆகவேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பில் பரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொண்ட உன்பாடுகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றில் கைச்சாத்திட்டதன் மூலம் நாம் சர்வதேச ரீதியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒற்றுமை, ஒத்திசைவு ஆகியவற்றை செயற்படுத்தவது மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. குறிப்பாக இன்று உலக நாடுகள் முன் அதுமுக்கிய இலக்காக இருக்கின்றது என்பதையும் அதனைச் செயற்படுத்துவதன் மூலம் மானிட சமூகத்தினதும் ஒட்டுமொத்த உலகத்தினதும் இருப்பை உறுதிப்படுத்த அது இன்றியமையாததாக அமையும் என்பதனையும் ஞாபகப்படுத்த வேண்டும்.
வறுமையிலிருந்து விடுபடும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் கிராமசக்தி எனும் புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் 2025ஆம் ஆண்டு வரையான தெளிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டத்தை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம். தேசிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்தை பலப்படுத்தி வறுமையிலிருந்து விடுபடும் அந்த பாரிய தேசிய செயற்திட்டத்தில் புதிய செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி, 2025ஆம் ஆண்டுவரை நாம் அமுல்ப்படுத்த எதிர்பார்க்கும் பொருளாதார திட்டம், நாட்டில் பொருளாதார புத்தெழுற்சியையும் சுபீட்சத்தை அடைவதற்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென நான் நம்புகிறேன்.
கௌரவ தலைவர் அவர்களே, எனது நாட்டிலும் உலகிலும் இன்று பிள்ளைகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். எமது நாட்டில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ என்ற தேசிய செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். போதைப் பொருளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், அவர்களை துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்தல், மூலம் முழு மானிட சமூகத்தினதும் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான செயறதிட்டமானது தேசிய, சர்வதேச ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். அத்திட்டத்தினை இலக்கை அடையும் வகையில் செயற்படுத்த வேண்டும் என்பதை நாம் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கின்றோம்.
பெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பில் அன்றுபோன்றே இன்றும் உலகத்தின் கூடுதல் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமவுரிமை வழங்கும்போது இன்றும் பல்வேறு வகையில் பெண்களுக்கு பாராபட்சாக நடத்தப்படுகின்றார்கள் என்பது உலகில் பல நாடுகளிலும் பல சமூகங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனது நாட்டுச சனத்தொகையில் நூற்றுக்கு 52 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாவார். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென்பதனை எமது புதிய அரசியல் திருத்தச்சட்டத்தில் கட்டாயப்படுத்தியிருக்கின்றோம்.
பிள்ளைகளைப் பாதுகாத்தல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாரிய பிரச்சினையாகவிருக்கும் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பில் நாம் தேசிய ரீதியில் செயற்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். ஒட்டுமொத்த மானிட சமூகத்தினதும் இருப்புக்காக போதைப்பொருள் ஒழித்தல் பாரிய சர்வதேச செயற்திட்டமாக செயற்படுத்த வேண்டுமென்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வியமாகும். அதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைத்து சமூகங்களிலும் பாடசாலை பிள்ளை முதற்கொண்டு போதைப்பொருளை ஒழிப்பதற்காக ஒட்டுமொத்த மனித குலமும் பொதுவான உடன்பாட்டுடன் பயணிக்க வேண்டியது முக்கியமானதென நான் கருதுகிறேன்.
30 ஆண்டு கால போருக்கு முகம்கொடுத்த எமது நாட்டில் 2015 ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வரும்போது முதன்மைப் பிரச்சினைகள் இரண்டு இருந்தன. முதலாவது வெளிநாட்டுக் கடன் சிக்கலாகும். வரையறையற்ற வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய நிலையில் பாரிய நிதிப்பற்றாக்குறை இருந்தது. அடுத்த விடயம் போர்க்காலத்தில் இடம்பெற்றாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முகம்கொடுப்பதாகும். ஆயினும் குறிப்பான தேசிய பொருளாதரத்தை பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார சுபீட்சத்தை உருவாக்குவதற்கும் இன்று நாம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்கள் ஊடாக வெளிநாட்டு கடன்களிலிருந்து விடுபடும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோர். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையினால் நான் மேற்குறிப்பிட்ட யுத்தகாலத்தில் நிலவிய சூழ்நிலை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கின்ற முன்மொழிவுகள் பற்றி அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதுடன் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றொம்.
குறிப்பாக நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாப்பதில் எனது அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக ஜனநாயக ரீதியிலான ஆட்சி முறையினை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தோடு இனிவரும் காலங்களிலும் அந்த விடங்களைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்பதனை விசேடமாக இங்கு குறிப்பிடுகின்றேன். நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி எனது நாட்டில் வாழும் பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பி சந்தேகம், நம்பிக்கையீனம், பழிதீர்க்கும் உணர்வு மற்றும் குரோதத் தன்மையினை நீக்கி அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் பாடுபடும் என்பதனைஇங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அதற்கமைய முக்கியமாக தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக நாம் முன்னெடு;துள்ள தேசிய செயற்திட்டங்கள் ஊடாக, பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதுடன் சமூகத்தில் ஆன்மீக ரீதியிலும் ஒழுக்கம் மிக்க பண்பான சமூகத்தை உருவாக்குவதற்காக எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.
விசேடமாக சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அவ்வாறான பின்னணியில் ஜனநாயகம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பலப்படுத்தி சர்வதேசத்தின் நற்பெயரைப் பெற்றுக்கொண்டு எம்மிடமிருந்து விலகியிருந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மிகச்சிறந்த அரசாட்சியை முன்னெடுக்கும் இந்த நேரத்தில் எமது நாட்டைக் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடென்ற ரீதியில் 62 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயங்கள் உடன்படிக்கைகள் ஒழுங்குவிதிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வரும் நாம், ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துத் தீர்மானங்களுக்கும் உறுப்பு நாடென்ற ரீதியில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றியுள்ளனெ;பதை இங்கே குறிப்பிடுகின்றேன்.
அதற்கமைய எனது நாட்டின் சுயாதீனத் தன்மை மற்றும் இறைமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரேரணைகள் ஆகியன தொடர்பில் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை ஒரு சுதந்திரமான சமாதானம் மிக்க நாடென்ற வகையிலும் நிதானமான பயணத்pன் மூலம் தெளிவான இலக்கை எட்ட எமக்கு உங்கள் அனைவரினதும் மதிப்புக்குரிய ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன்.
சில கடும்போக்காளர் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர்; விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும்; 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி எனது அன்புக்குரிய நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். ஆகையினாலே நிதானமாகச் செல்லும் காத்திரமான பயணத்திற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நல்க வேண்டுமென இங்கே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறேன்.
துரிதமான பயணம் ஆபத்துமிக்கதாகும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் சில கடும்போக்காளர் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதிலுள்ள சிரமங்களை, எமது ஒட்டுமொத்த சமூகத்திலுமுள்ள சிக்கலான தன்மையின் அடிப்படையில் நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்களென நான் நம்புகிறேன். ஆகையால் எனது நாட்டினுள் மீண்டுமொரு போர் ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இனங்களிடைNயயும் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு எனது அரசு முன்னெடுக்கும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் ஒத்துழைப்புக்களை மிகவும் கௌரவமாக எதிர்பார்க்கிறேன்.
பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பண்பான சமூகத்தைக் கட்டியெழுப்பி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படாத வண்ணம் செயற்பட்டு உலகில் சுபீட்சம் மிக்க பொருளாதாரத்துடன் கூடிய முன்மாதிரியான ஒரு நாட்டை உருவாக்க உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதுடன் கௌரவ தலைவர் அவர்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துககளை கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.