அரச தலைவர்கள் மட்டும் பங்குபற்றும் இக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் கலந்துகொண்டார்.
உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திறனை மேலும் அதிகரித்தல், ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் நிர்வாக செலவுகளை குறைத்து உறுப்பு நாடுகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் செயற்படுவது தொடர்பாகவும் விரிவாக கவனம்செலுத்தப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் இக்கூட்டத்தொடரில் பங்குபற்றினர்.
{jathumbnail off}