பத்தரமுல்ல, எமது கிராமம் வளாகத்துக்கருகில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரிய 120 பேர்ச்சஸ் காணியில் 250 மில்லியன் ரூபா செலவில் நூலகம், நூதனசாலை மற்றும் ஆவணக்காப்பகத்தை உள்ளடக்கியதாக அமரதேவ சங்கீத ஆச்சிரமம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கலாநிதி வித்தகர் அமரதேவ சங்கீத ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு ஜனாதிபதி அவர்கள் வித்தகர் நந்தா மாலினி அம்மையாரையும் அழைத்தமை சிறப்பான விடயமாகும். நிர்மாண வேலை தொடர்பான நினைவுப் பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். வரவேற்புரையை ரஞ்சன் அமரதேவ ஆற்றினார்.
நினைவு பேருரையை ஆற்றுவதற்காக ஜனாதிபதி அவர்கள், பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களை அழைத்தமை சிறப்பான விடயமாகும்.
இலங்கையிலும், உலகிலுமுள்ள இசைப்பிரியர்களை ஏழு ஸ்வரங்களால் பேரானந்தத்தில் ஆழ்த்திய வித்தகர் அமரதேவ அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆசிய நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமோன் மெக்ஷேஸே விருதை விமலா அம்மையார், ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைத்தார். அந்த விருதையும் சான்றிதழையும் கலாச்சார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன அவர்கள் முன்னிலையில் நூதனசாலை பணிப்பாளர் சனூஜா கஸ்தூரியாராச்சியிடம் ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, எஸ்.பி.நாவின்ன, நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, கயந்த கருணாதிலக்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, அகில விராஜ் காரியவசம், தயா கமகே, பிரதி அமைச்சர்களான லசந்த அளகியவன்ன, கருணாசேன பரணவிதான, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.அமரதுங்க உள்ளிட்ட அலுவலர்களும் கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் பிரமுகர்கள், விமலா அமரதேவ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.