இலங்கையில் வாழும் 19 இனக் குழுமங்கள் தொடர்பான தகவல்கள், அவர்களது பண்பாடுகள் மற்றும் பாரம்பரியங்களை உள்ளடக்கி தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
நூலின் முதற்பிரதி அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
19 இன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நூலை எழுத பங்களிப்பு செய்தோருக்கான பரிசில்கள் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதியுமான உனா மெக்கோலீ அம்மையாருக்கும் ஜனாதிபதி அவர்கள் நினைவு பரிசை வழங்கினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஆளுனர்கள், மாகாண முதலமைச்சர்கள், அரச அலுவலர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.