உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி பிள்ளைகளின் சுற்றாடல் அறிவுக்கும் பொழுதுபோக்குக்கும் பங்களிப்பு வழங்கும் இந்த பூங்காவை தூய்மையாகவும், சுற்றாடல் நேயமாகவும் பேணுவது அனைவரதும் பொறுப்பாகுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்காக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் இந்த பூங்காவை உருவாக்கி வழங்குவதற்காக பங்களிப்பு செய்த, வழிகாட்டிய அனைவருக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, வடமத்திய மாகாண விவசாய அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதற்கு மேலதிகமாக பொலன்னறுவை மாவட்ட கிராம அலுவலர்களுக்கு டெப் கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்றது.
தொலைதொடர்புகள், டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலில் ”திறன் சமூக வட்டம்” செயற்திட்டத்தின் கீழ் இந்த டெப் கணனிகள் வழங்கப்படுகின்றன. அதனை குறிக்குமுகமாக தமன்கடுவ, திம்புலாகல மற்றும் ஹிங்கிராக்கொட பிரதேச செயலக பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் சிலருக்கு ஜனாதிபதி அவர்களால் டெப் கணனிகள் வழங்கப்பட்டன.
தொழில்நுட்ப அறிவுடனான சமூகத்தை உருவாக்கும் இந்த செயற்திட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது. நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவி திருமதி சித்ராங்கனி முபாரக் அவர்களும் கலந்துகொண்டார்.
நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூர்ந்து திம்புலாகல – மட்டக்களப்பு சந்திக்கருகிலுள்ள பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விகாரையை புனர்நிர்மாணத்தின் பின் திறந்து வைக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, மாகாண சபை உறுப்பினர் ஜகத் சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.