அரசாங்க நிறுவனங்கள் அனைவருடனும் நெருங்கிப் பணியாற்றுவதுடன், ஜனாதிபதி அலுவலகத்தின் சின்னத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கற்றுக்கொள்வதற்கு தான் எப்போதுமே விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்த அவர், கற்றுக்கொள்வதற்கு காலம் கடந்துவிடவோ வயதாகிவிடவோ இல்லை என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னால் ஆளுநரான ஒஸ்டின் பெர்ணான்டோ இன்று (04) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து ஜனாதிபதியின் புதிய செயலாளராக தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக வித்தியாசமான கருத்துக்களை கொண்ட ஊழியர்கள் இருக்கலாம். அவர்கள் கலந்துரையாடி தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்றும் செயலாளர் பெர்னாண்டோ குறிப்பிட்டார். நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் பலப்படுத்துவதற்கான வித்தியாசமான கருத்துக்களை முன்வையுங்கள். அதுவே எமக்குத் தேவை. புதிய கருத்துக்களுக்கும் வித்தியாசமாக சிந்திப்பவர்களது கருத்துக்களுக்கும் செவிமடுக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘அமைச்சுக்களின் தொகுதி அமைப்பு’ குறித்த ஒரு புதிய மாதிரி பற்றி நாம் கலந்துரையாடி வருகின்றோம். இது அரச நிர்வாகத்துறையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக நாம் கலந்துரையாடி வரும் புதிய மாதிரியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் முத்திரைப் பெயரை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் ஒரு குடும்பமாக செயற்பட்டு இந்த அலுவலகத்தை மேலும் பலமானதாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.