ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (12) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றதுடன் நிகழ்வின் பிரதான உரையை ஆற்றும்போது இந்திய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் மிக நெருங்கிய உறவு பெளத்த மதமாகுமென தெரிவித்த இந்திய பிரதமர், இந்திய அரசாங்கத்தினதும், சமூகத்தினதும் இன்றியமையாதவொரு ஒரு பாகமாக பௌத்த சமயம் காணப்படுவதுடன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அது தூண்டுகோலாக அமைகிறது என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறும் இந்த உன்னதமான வெசாக் கொண்டாட்டத்திற்கு தம்மை அழைத்தது குறித்தும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.
வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், பௌத்த கோட்பாடுகளின் செய்திகளை உலகிற்கு வழங்குவதனூடாக இன்று உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், சமூகத்தை அமைதிப்படுத்தி மனிதர்களை நல்வழிப்படுத்தவும் பாரிய பங்களிப்பு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
தேசிய, சர்வதேச ரீதியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வுகள் தேரவாத பௌத்த கோட்பாடுகளுக்குள் புதைந்து காணப்படுகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பௌத்த கோட்பாடுகளுடன் ஆதிகாலம் முதல் கட்டியெழுப்பப்பட்ட இந்திய-இலங்கை தொடர்புகளையும் ஜனாதிபதி அவர்கள், இதன்போது நினைவுகூர்ந்தார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பிரதம அதிதிகளால் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைய மங்கள விளக்கேற்றி சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை நினைவுகூரும் முகமாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இந்திய பிரதமருக்கு விசேட நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்டது.
அஸ்கிரி, மல்வத்து பிரிவுகளின் மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரும், உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளை சேர்ந்த தேரர்களும், பேராயர் வண. மெல்கம் ரஞ்சித் அவர்கள் உள்ளிட்ட சர்வ மத தலைவர்களும், கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், பெருந்தொகையான உள்நாட்டு வெளிநாட்டு விசேட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

10

11

12

13

14

16

18

{jathumbnail off}