இலக்கியம்> கலை. சமூக சேவை> விளையாட்டு> பாரம்பரிய மருத்துவம்> தொழில்வாண்மை> பாரம்பரிய கலைத்திறன்கள்> புத்தாக்கங்கள் போன்ற பத்து துறைகளைப் பாராட்டி> ஆறு ஞாபகார்த்த விருதுகள் உள்ளிட்ட இருபத்தியெட்டு விருதுகள் ஜனாதிபதி அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
அமரர்களான வண.ஸ்ரீ சீலாலங்கார தேரர்> பாடலாசிரியர் ஸ்வர்ண ஸ்ரீ பண்டார> பாடலாசிரியர் சட்டத்தரணி ரண்பண்டா செனவிரத்ன> பாடகர் குணதாஸ கப்புகே> திரைப்பட தயாரிப்பாளர் தம்மிக்க சிறிவர்த்தன> விளையாட்டு போதனாசிரியர் குமுது குமார சில்வா ஆகியோருக்காகவும் தங்க விருதுகள் வழங்கப்பட்டன.
வடமத்திய மாகாண ஆளுனர் பீ.பி.திஸாநாயக்கா அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க> சந்ராணி பண்டார> பீ.ஹரிசன்> வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.