மகாவலி கிராமங்களிலுள்ள பாடசாலைப் பிள்ளைகளின் கலை மற்றும் கலாச்சார ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது எண்ணக்கருவிற்கமைய மகாவலி கலாச்சார அணி, மகாவலி நிலையத்துடன் இணைந்து ‘மகாவலி பிரதீபா’ கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகாவலி கிராமங்களிலுள்ள பிள்ளைகளின் கலை ஆற்றல்களை இனங்காணுதல், கலை ஆற்றல்களை மேம்படுத்த வழிகாட்டுதல், இலங்கையின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக கலாச்சாரத்தை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்தல், மகாவலி வலய பிள்ளைகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அரங்கை உருவாக்குதல் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
850 மகாவலி வலய பிள்ளைகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற மகாவலி பிரதீபா வலயங்களுக்கிடையிலான கலைவிழாவில் மகாவலி பிள்ளைகளின் பாடல், இசை, நடன ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
சிறப்பாக திறமை வெளிப்படுத்திய பிள்ளைகளுக்கான சான்றிதழ்கள் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, விஜித் விஜயமுனி டி சொய்ஸா, பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுபாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அனுர திஸாநாயக்க, மகாவலி நிலைய பணிப்பாளர் அருண பிரசாத் லேக்கம்கே மற்றும் தூதுவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.