80 படைவீரர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், தரம் 01 முதல் தரம் 05 வரையான 25 பிள்ளைகளுக்கு தலா 20,000 ரூபாவும், தரம் 06 முதல் தரம் 08 வரையான 27 பிள்ளைகளுக்கு 30,000 ரூபாவும் தரம் 09 முதல் உயர் தரம் வரையிலான 30 பிள்ளைகளுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்பட்டது.
மேலும் இப்பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடை மற்றும் காலணிகளும் வழங்கப்பட்டன.
எட்டு மாணவர்களுக்கு லெப்டொப் கணனிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி, இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, சிவில் பாதுகாப்புப்படை பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி வசந்த குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.