உள்ளக விவகாரங்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன, அமைச்சின் செயலாளர் டீ.
ஸ்வர்ணபால ஆகியோரால் பாரம்பரிய முறைப்படி சுபநேர அட்டவணை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
புத்தாண்டு உதயம், புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு தயாரித்தல் மற்றும் உணவுட்கொள்ளல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் புதிய வருடத்தில் தொழிலுக்கு புறப்பட்டுச் செல்லல் போன்ற புத்தாண்டு பாரம்பரியங்களுக்கான சுப நேரங்கள் இந்த சுபநேர அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்ரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.