தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆரம்பச் செயற்திட்டமான பஸ் பயணிகளுக்கான முற்கொடுப்பனவு பயண அட்டையை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டவையிலுள்ள மாக்கும்புர போக்குவரத்து நிலையத்திலிருந்து காலி நோக்கி பயணிக்கும் பஸ் பயணிகளிடம் அறிமுகம் செய்து வைப்பதனை படத்தில் காணலாம்.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆரம்பச் செயற்திட்டத்தினூடாக அடையாளம் காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறும் அமைச்சர் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இச்சந்தர்ப்பத்தில் அறிவுறுத்தல் விடுத்தார்.