விக்கும் லியனகே என அழைக்கப்படும் லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு அவர்கள் புதன்கிழமை (1) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.இராணுவத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த அவருக்கு இராணுவ தலைமையக பிரிகேட் தளபதி பிரிகேடியர் இந்திக பெரேரா சம்பிரதாயபூர்வமாக வரவேற்றதைத் தொடர்ந்து, கஜபா படையணியின் படையினரால் இராணுவ மரபுகளின்படி இராணுவ பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், அணிவகுப்பு மைதானத்தை வந்தடைந்த தளபதியை பிரதி இராணுவ பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் அன்புடன் வரவேற்று, விசேட மேடையில் இருந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண பொதோட்ட அவர்கள் அன்றைய தின பிரதம அதிதியை விசேட மேடைக்கு அழைத்துச் சென்றார்.அன்றைய நிகழ்வில் இராணுவ மரபுகளுக்கமைவாக அணிவகுப்புத் தளபதி கஜபா படையணியின் கெப்டன் எஸ்.ஆர்.வி.கே.எஸ். பண்டார அடையாள வாளை ஏந்தியவாறு 2 அதிகாரிகள் மற்றும் 48 சிப்பாய்களை கொண்ட அணிவகுப்பை அன்றைய பிரதம விருந்தினருக்கு மதிப்பாய்வு செய்ய அழைப்புவிடுத்தார்.

அனைத்து வண்ணமயமான படையணியின் கொடிகளும் பறக்கவிடப்பட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் அணிவகுப்பு தளபதியியுடன் இராணுவத் தளபதி அவர்கள் இராணுவ கௌரவிப்பினை மதிப்பாய்வு செய்ததனை தொடர்ந்து அணிவகுப்புப் குழுவினரால் இசைக்கப்பட்ட தேசபக்தி உணர்வுகளின் தாளங்கள் மற்றும் மெல்லிசைகள் அன்றைய கண்ணியமான நிகழ்வுக்கு பிரமாண்டத்தையும் முக்கியத்துவத்தையும் சேர்த்தது.சிறிது நேரத்திற்குப் பின்னர், இராணுவத் தலைமையகத்தில் தனது செயலகத்தின் நுழைவாயிலுக்கு வருகை தந்த தளபதியின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்த, தலைமை பதவிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். தளபதியின் அலுவலகத்தை வந்தடைந்தவுடன், புதிய தளபதி புத்தருக்கு மலர் அர்ச்சனை செய்தார்.

சில நிமிடங்களின் பின்னர், கோட்டே ரஜமஹா விகாரையின் விகாராதிபதியான வண. கலாநிதி அலுத்நுவர சோரத தேரர், விஹாராதிகாரி, கங்காராமய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரர், மற்றும் மகா சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு பாரம்பரியமான 'தெஹெத் வத்திய' (வெற்றிலைத் தட்டு) வழங்கப்பட்டதோடு, தளபதியின் அலுவலகம் மற்றும் நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சுருக்கமான சொற்பொழிவை (அனுசாசனம்) மிரிசவெட்டிய ரஜ மகா விகாரையின் பிரதம அதிதியான வென் ஈத்தலவெதுனுவெவே ஞானதிலக தேரர் அவர்கள் வழங்கினார்.

'செத்பிரித்' பராயாணம் ஓதப்பட்டதைத் தொடர்ந்து, புதிய இராணுவத் தளபதி தனது பதவியை ஏற்றுக்கொண்டமைக்கான முறையான ஆவணத்தில் கையெழுப்பமிட்ட நிகழ்வில், தளபதியின் பாரியாரான திருமதி ஜானகி லியனகே மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அனைத்து மதகுருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதுடன், மகா சங்கத்தினர் மற்றும் பிற கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களுக்கு 'பிரிகார' தானம் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் இந்நிகழ்வுகள் நிறைவடைந்தது.

புதிய இராணுவத் தளபதியின் சுருக்கமான விவரம் இங்கே;

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் 2022 ஜூன் 01 முதல் லெப்டினன் ஜெனரல் பதவி உயர்வு கிடைக்கப் பெற்ற லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு இலங்கை இராணுவத்தின் 24 வது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்,லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியாக கடமையாற்றி வந்தார். தற்போது வெளியேறும் இராணுவ தளபதிக்கு அடுத்ததாக உள்ள இராணுவத்தின் மிக சிரேஷ்ட அதிகாரி இவர்.லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பயிளிவல் அதிகாரியாக 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி உள்வாங்கல் பாடநெறி – 26 இன் கீழ் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் இணைந்து கொண்டார். அதனையடுத்து தியத்தலாவ புகழ்பெற்ற இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியிலும் பின்னர் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியிலும் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்ற இவர், இரண்டாம் லெப்டினன் அதிகாரவாணையுடன் கஜபா படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அவரது புகழ்மிக்க 35 வருட இராணுவ சேவையில், குழு கட்டளை அதிகாரி, 4 வது கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரி மற்றும் அணி கட்டளை அதிகாரி, 21 மற்றும் 55 வது படைப்பிரிவுகளின் புலனாய்வு அதிகாரி, 14 வது கஜபா படையணியின் 2 ஆம் கட்டளை அதிகாரி, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி, கஜபா படையணியின் பதவி நிலை அதிகாரி – II (நிர்வாகம்) , 10 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, பணிநிலை கடமைகள் பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரி II, 8 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 225 மற்றும் 553 வது பிரிகேடிகளின் பதில் கடமை தளபதி, கொழும்பு நடவடிக்கை பிரிவின் தளபதி, 215, 542, 224, 221 மற்றும் 623 பிரிகேடுகளின் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் கொள்கை மற்றும் பயிற்சி பணிப்பக பணிப்பாளர், நடவடிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிப்பகத்தின் பணிப்பாளர், அம்பாறை இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி, உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர், 21 வது படைப்பிரிவு தளபதி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் தளபதி, இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இராணுவ வுஷூ குழுவின் தலைவர் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார்.

225 வது மற்றும் 553 வது பிரிகேடிகளின் பதில் கடமை தளபதி, கொழும்பு நடவடிக்கை பிரிவின் தளபதி, 215, 542, 224, 221 வது மற்றும் 623 வது பிரிகேட்களின் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் கொள்கை மற்றும் பயிற்சி பணிப்பக பணிப்பாளர், நடவடிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிப்பகத்தின் பணிப்பாளர், அம்பாறை இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி, உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர், 21 வது படைப்பிரிவு தளபதி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி, இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இராணுவ வுஷூ குழுவின் தலைவர் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார்.லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே வகித்த நியமனங்களின் போதான அனுபவங்களை கொண்டு அவரது பெரும் இலக்குகளையும் அடைந்துகொண்டுள்ளார். அதன்படி இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் (மாதுருஓயா) உள்ளகப் பாதுகாப்பு / புரட்சி எதிர் போர்ப் பாடநெறி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் வழிநடத்தல் தொடர்பிலான பாடநெறி, மின்னேரிய பீரங்கி பாடசாலை முன்னரங்க பராமரிப்பு தொடர்பிலான பாடநெறி, மின்னேரியா படையலகு உதவி ஆயுத பாடநெறி, மாதுரு ஓயா பாடசாலையி்ல் புத்தாக்கம் தொடர்பிலான பாடநெறி, இராணுவ தலைமையகத்தில் புத்தாக்க அணி கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, இராணுவ புலனாய்வு படையணியில் படையலகு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பாடநெறி, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு தொடர்பிலான பாடநெறி என்பவற்றையும் பின்பற்றியுள்ள அவர், (UNHCR) ஐநா அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் அடிப்படை மருத்துவ செயற்பாடுகள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பிலான பாடநெறி மற்றும் 21 வது படைப்பிரிவின் பல்தேசிய படையலகு அப்பியாசம் -3 இலும் பங்குபற்றியுள்ளார்.

இந்தியாவில் அதிகாரிகளுக்கான உடல் பயிற்சி பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளுக்கான பாடநெறி, இந்தியாவில் இளம் கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, பங்களாதேஷில் படையலகு கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட தளபதிகளுக்கான பாடநெறி உட்பட பல வெளிநாட்டு பாடநெறிகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் தொழில்முறை தகைமைக்கான கருத்தரங்குகள் ஆகியவற்றையும் நிறைவு செய்துள்ள அவர், ஹவாயில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பிலான பாடநெறி, இந்தோனேசிய லெம்ஹன்னாஸில் தேசிய கல்வித் திட்டம் ஆகியவற்றையும் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்தோனேசியாவின் லெம்ஹன்னாஸ் பல்கலைக்கழகத்தில் மூலோபாய மற்றும் பின்னடைவு ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், ஹவாயில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையத்தில் ‘இந்து-பசிபிக் பிராந்தியத்தில் உலகளாவிய பாதுகாப்பு’ என்ற பட்டமும் பெற்றுள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள இந்தூர் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மேலாண்மையில் டிப்ளோமாவினை பெற்றுள்ளார்.

இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் உச்சக்கட்டத்தின் போது, ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெற்றிபெற்ற 57 வது மற்றும் 56 வது படைப்பிரிவுகளின் 8 வது கஜபா படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல வெற்றிகளைப் பெற அவரால் முடிந்தது. அதற்கு மேல் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்குகொண்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் எதிரிகளை எதிர்கொள்வதில் தனிப்பட்ட அல்லது அதனுடன் இணைந்த துணிச்சலான செயல்களுக்காக ரண விக்கிரம பதக்கம (RWP) என்ற வீர விருதுகளால் அலங்கரிக்கப்பட்டவர். எதிரிகளின் எதிர்த்து சிறந்த நடத்தைக்காக அவர் ரண சூரா பதக்கம் (RSP) உடன் அலங்கரிக்கப்பட்டார். வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு முன்னோடியாக இருந்ததற்காக சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் மூன்று முறை மேலே பதக்கங்களை வழங்கினார். மேலும், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளின் போது காயமடைந்ததற்காக தேச புத்திர பதக்கத்தினையும் பெற்றவர். லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம, வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், ரிவிரேச பிரச்சார சேவை பதக்கம், 50 வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நினைவு பதக்கம் போன்ற சேவை அலங்காரங்களையும் பெற்றுள்ளார். சேவை பதக்கம், சேவா அபிமானி பதக்கம் மற்றும் சேவை பதக்கம்.

இவர் தனது பாடசாலை பருவத்தில் தடகள மற்றும் ஹொக்கி போட்டிகளில் சிறந்த மாணவராக பிரகாசித்ததுடன், மாத்தளை விஜய கல்லூரியில் பல தடவைகள் பாராட்டுக்குரிய பாத்திரமாகியுள்ளார்.

அதேபோல் புத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி அமரபுர பீடத்தினால் ஜனமான்ய விபூத்திரத்னா’ என்ற கௌரவ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. திருமதி ஜானகி லியனகே அவர்களை மணம் முடித்துள்ள அவர் ஒரு மகள் மற்றும் ஒரு மகனினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்.