வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக மீண்டும் நியமனம் பெற்றுள்ள  நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அனுஷ பெல்பிட்ட இன்று (25) வெகுசன ஊடக அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவரது நியமனக் கடிதம் நேற்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதற்கு முன்னரும் இவர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.