புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி.பந்துல குணவர்தன நேற்று தனது கடமைகளை வெகுசன ஊடக அமைச்சில் வைத்து பொறுப்பேற்றார். இந்த அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக அமைச்சர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடதக்கது.