மாத்தறை நகரில் உள்ள இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும  அவர்களின் தலைமையில் சனிக் கிழமை (05) பிற்பகல் வெலிகமை பிரதேச செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 மாத்தொட்ட இராணுவ வீர ஒன்றியம், ஹெல ஜாதிக இராணுவ வீர ஒன்றியம், மற்றும் அகில இலங்கை கலாசார ஐக்கிய மன்றம் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

 வெலிகம சாசனாரக்ஷன ஒன்றியத்தின் செயலாளர் வண.வேபத்திர இந்திரசிறி நாயக்க தேரர், மாத்தோட்ட இராணுவ வீர ஒன்றியம் மற்றும் வெலிகமை பிரதேச சபைத் தலைவர் திரு. புஷ்பகுமார பட்டகே, அகில இலங்கை கலாசார ஐக்கிய மன்றத்தின் தலைவர் கலாநிதி திரு. குசான்  ஜயமின் த சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.