2017.03.28 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

01.பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பான குழுவின் சிபார்சுகளை செயற்படுத்தல் (விடய இல. 06)

2005ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் தகவல்கள் தேடியறிவதற்கு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு இணங்க ஜனாதிபதி செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதனடிப்படையில் பத்திரிகை விளம்பரம் ஒன்றின் மூலம் குறித்த ஊடகவியலாளர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கோரப்பட்டன. அதனடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பான குழுவின் சிபார்சுகள் முன்வைக்கப்பட்டன. அச்சிபார்சுகளை மேலும் ஆராய்வதற்கென அமைச்சரவைக்கு தகவல்களை அறிக்கையிடுவதற்காக வேண்டி வெளி விவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


02. சேவைத்திறனுக்கான தகைமை அபிவிருத்தி – 2017/2018 (விடய இல. 08)


இலங்கை அரசாங்கத்துக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் விசேட திறமை அவகாசங்களை மேலும் விருத்தி செய்வதற்காகவேண்டி 'சேவைத்திறனுக்கான தகைமை அபிவிருத்தி' எனும் பெயரில் மத்தியகால பயிற்சி வேலைத்திட்டமொன்றை 2017 – 2018 காலப்பிரிவிற்குள் சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரி மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக மன்றத்தின் ஊடாக இணைந்து செயற்படுத்துவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


03. அலிகொட ஆர நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகின்ற வெள்ளவாய, கொடிகம்பொக்கை கற்பாறையினை அகழ்தல் (விடய இல. 09)


உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அலிகொட ஆர நீர்த்தேக்கத்தின் எல்லையில் அமைந்திருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையில் 2018ம் ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருவதற்கு இருந்த நீர்த்தேக்கத்துக்கு நீரினை நிரப்புவதன் மூலம் இக்கனிய வளத்தினை அகழ்வுகளை மேற்கொன்வதற்கு முடியாது போய்விடும். அதனால் குறித்த அகழ்வுகளினை அதற்கு முன்னர் மேற்கொண்டு பொருளாதாரத்தினை பலப்படுத்தும் நோக்கில், முறையான ஆய்வொன்றை மேற்கொள்வதற்கும், அப்பெறுபேறுகளின் அடிப்படையில், திறந்த விலைமனுக்கோரல் முறையினை பின்பற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்வனங்களிடமிருந்து விலைமனுக்கோரலினைப் பெற்று தகுதிவாய்ந்த நிர்வனம் ஒன்றை தெரிவு செய்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


04. பொருளாதார பலன்களை பெற்றுக் கொள்ளும் வெலைத்திட்டத்திற்காக (EDP) நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவங்களை வரையறுத்தல் (விடய இல. 13)


பொருளாதார பலன்களை பெற்றுக் கொள்ளும் வெலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் துறைகளில் விருத்தியினை அடைந்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
1. மக்களுக்கு கிடைக்கின்ற வருமானம்
2. தனியார் துறை வேலைவாய்ப்பு
3. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள்
4. இறக்குமதி
5. அரச வருமானம்
சுற்றுலாத்துறை, விவசாயம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகள் இவ்வேலைத்திட்டத்துக்கு நேரடி தடையாக இருக்கும் என தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் துறைகளாக முதலீடுகள், டிஜிடல் பொருளாதாரம் மற்றும் அரச வருமானம் எனும் துறைகள் காணப்படுகின்றன. இவ்வேலைத்திட்டத்தினை குறித்த அமைச்சர்களின் தலைமையில் மேற்கொள்வதற்கும், குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் இரு வாரத்துக்கு ஒருமுறை முன்னேற்ற அறிக்கையொன்றை பிரதமர் மற்றும் அமைச்சரவை உப குழுவின் மூலம் முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கால வரையறைக்கு உட்பட்டு இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


05. மின்சாரத்தினால் பயணிக்கின்ற வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்கான மத்திய நிலையமொன்றை வரையறுத்தல் (விடய இல. 12)


இலத்திரனியல் வாகன பயன்பாட்டாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், மினனேற்றுவதற்கான கட்டணம், பாதுகாப்பான தர நிர்ணயங்கள், அளவீட்டு கருவிகளின் உண்மைத்தன்மை, நுகர்வோரின் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரல் ஆகிய காரணங்களை கவனத்திற் கொண்டு, குறித்த விதப்புரைகளை உள்ளடக்கும் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சக்தி சட்டத்தினை திருத்துவதற்கும், அதுவரை இலத்திரனியல் வாகனங்கள் மின்னேற்றும் மத்திய நிலையங்கள் தொடர்பில் இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் வழிகாட்டலின் அடிப்படையில் செயற்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. புதிய களனி பாலத்திலிருந்து அதுருகிரிய வரையில் நிலத்துக்கு மேலாக பயணிக்கின்ற கடுகதிப்பாதை (விடய இல.13)


இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ள புதிய களனி பாலத்திலிருந்து அதுருகிரிய வரையிலான நிலத்துக்கு மேலாக பயணிக்கின்ற கடுகதிப்பாதை வேலைத்திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வேலைத்திட்ட குழுவின் சிபார்சின் அடிப்படையில் செயற்றிட்ட ஆய்வு மற்றும் அடிப்படை திட்டத்தினை தயாரிப்பதற்காக ஆலோசனையாளர்களை தெரிவு செய்வதற்கும், இணக்கம் தெரிவித்துள்ள நிர்வனங்களிடமிருந்து விலை மனுக்களை கோருவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


07. 2016ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் (விடய இல. 14)


2016ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் செயலாளருக்கு அமைச்சரவையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், 2016ம் ஆண்டு தொடர்புள்ள 10 அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 80மூ க்கும் அதிகமான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. 21 அமைச்சுக்களின் மூலம் 60மூ - 80மூ க்கும் இடைப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2016 ஒதுக்கீட்டின் மூலம் சராசரியாக 62.3மூ நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட இத்தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.


08. சுற்றுலா பயணிகளுக்காக புகையிரத நிலையத்திற்கு அருகில் தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தல் ; (Back Packing Tourist Accommodation) (விடய இல. 15)


இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கைவிடப்பட்டுள்ள புகையிரத நிலையங்களை புனரமைத்து, கொழும்பு, மஹய்யாவ, நானுஓயா, அம்பேவல, எல்ல மற்றும் தொடந்துவ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள இடங்களை இணங்கண்டு அவற்றில் சுற்றுலா பயணிகளுக்காக புகையிரத நிலையத்திற்கு அருகில் தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் புகையிரத திணைக்களத்திற்கு மேலதிக இலாபத்தை ஈட்ட முடியும் என இனங்காணப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பிரேரிக்கப்பட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்காக புகையிரத நிலையத்திற்கு அருகில் தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தல் (டீயஉம Pயஉமiபெ வுழரசளைவ யுஉஉழஅஅழனயவழைn) வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


09. ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இறுதய நோய் தொடர்பான சிகிச்சை மற்றும் அவதானம் நிறைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை சேவையினை வழங்குவதற்கான கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 18)


ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இறுதய நோய் தொடர்பான சிகிச்சை மற்றும் அவதானம் நிறைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை சேவையினை வழங்குவதற்காக சகல வசதிகளுடன் கூடிய 10 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக பொறியியல் செயற்பாடுகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டு தொகைக்கு இணங்க வேலைத்திட்டத்தின் மதிப்பீட்டு தொகையானது 2,439.7 மில்லியன் ரூபாய்கள் என திருத்தியமைப்பதற்கும், இத்தொகையினை ஒன்றிணைந்த நிதியம் மற்றும் இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியவர்களின் நிறுவனத்தின் மூலம் 'டுவைவடந ர்நயசவள' எனும் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ள நிதிகளின் மூலம் மேற்கொள்வதற்கும், இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை 02 வருடங்களில் நிறைவு செய்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


10.பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் மின் இணைப்புகளை மேற் கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 27)
பிம்ஸ்டெக் (டீஐஆளுவுநுஊ) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் மின் இணைப்புகளை மேற் கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11.சிறு வயதுபடைத்தவர்களின் இறப்பு மீது நட்ட ஈடுகளை அறவிடுதல் (விடய இல. 30)

பிற நபர் ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்கள் படுகின்ற உள்ளார்ந்த கஷ;டங்களை கவனத்திற் கொண்டு, குறித்த செயலில் ஈடுபடும் நபர்களிடமிருந்து நட்ட ஈட்டு தொகையொன்றை அறவிடுவதற்கு ஏதுவான வகையில் சட்டம் ஒன்றை தயாரிப்பது பொருத்தம் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் சட்டம் ஒன்றை வரைவதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12.பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு தபால் நிலைய கட்டிட தொகுதி மற்றும் பூஜாபிட்டிய தபால் காரியாலயம் என்பவற்றை நிர்மாணித்தல் (விடய இல. 33)
பொலன்னறுவையில் காணப்பட்ட தபால் நிலையத் தொகுதிக்கு பதிலாக கதுறுவெல பகுதியில் புதிய தபால் நிலைய கட்டிட தொகுதியொன்றையும், மட்டக்களப்பு தபால் நிலைய கட்டிட தொகுதிக்காக வேண்டி 06 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிட தொகுதியொன்றையும், கண்டி பூஜாப்பிட்டிய தபால் காரியாலயம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியினை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.எம். ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


13. ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்காக ஆயபநெவiஉ சுநளழயெnஉந ஐஅயபiபெ ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 37)


ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்காக ஆயபநெவiஉ சுநளழயெnஉந ஐஅயபiபெ ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச விலைமனுக்கோரலுக்கு இணங்க 03 விலை மனுக்கள் கிடைத்துள்ளன. அவ்விலை மனுக்களை பரிசீலித்து அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 251.78 மில்லியன் ரூபா தொகைக்கு வரையறுக்கப்பட்ட டெக்நொமெடிக்ஸ் இன்டர்நெஷனல் தனியார் நிறுவனத்துக்கு குறித்த டென்டரினை வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


14. கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 02 ஹோட்டல்கள் நிர்மாணித்தல் மற்றும் செயற்படுத்தல் (விடய இல. 39)


கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 02 ஹோட்டல்கள் நிர்மாணித்தல் மற்றும் செயற்படுத்துவதற்கு உகந்த முதலீட்டாளர்களை இனங்காண்பதற்காக அவர்களின் யோசனைகளை கோருவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் குறித்த யோசனைகளை பரிசீலித்து அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் மலேசியாவின் ஈசீஎம் லிப்ரா பய்னேன்ஷpயல் குறூப் பர்ஹேட் மற்றும் சிங்கப்பூரின் டீபி ரியல் எஸ்டெட் ஹோல்டின்ஸ் (தனியார்) நிறுவனம் ஆகிய முதலீட்டாளர்களுக்கு குறித்த இடப்பகுதியில் 02 ஹோட்டல்களை நிர்மாணித்து பராமரித்து செல்வதற்காக வேண்டி 40 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


15. மேல்நாட்டு புகையிரத மார்க்கத்தின் திருத்த வேலைகள் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் சக்தி பிறப்பாக்கி தொகுதிகளை கொள்வனவு செய்தல் (விடய இல. 40)


மேல்நாட்டு புகையிரத மார்க்கத்தின் திருத்த வேலைகள் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் சக்தி பிறப்பாக்கி தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட விலைமனுக்களில் குறைந்த தொகையினைக் கொண்ட சீனாவின் டெங்பெங் இலக்ரோனிக் இன்டர்நெஷனல் கோபரேஷன் நிறுவனத்துக்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தினை வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


16.பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 42)


களனி, வயப, ருஹுன, மொரடுவ, ரஜரட, கொழும்பு, இலங்கை மதகுருமார், பேராதெனிய, சபரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் 13 வேலைத்திட்டங்களை 6,960.95 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் செயற்படுத்துவதற்காக போட்டித் தன்மைமிக்க விலை மனுக்கோரல் முறையினை பயன்படுத்தி ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்கும், அதற்காக 2017 – 2022 மத்திய கால வரவு செலவு திட்ட அமைப்பின் கீழ் நிதி ஒதுக்கி கொள்வதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


17. தெதுறு ஓயா நீர் வழங்கல் வேலைத்திட்டம் - ஆலோசனை சேவை திட்டங்களை நெறிப்படுத்தல் மற்றும் கட்டுமானப்பணிகளை மேற்பார்வை செய்தல் (விடய இல. 43)


தெதுறு ஓயா நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி கொரியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன நிதியத்தின் மூலம் 58.15 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை வழங்க இலங்கை அரசாங்கத்தின் மூலம் 2014ம் ஆண்டு கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட்டது. அக்கடன் தொகையினை பயன்படுத்தி தெதுறு ஓயா நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் ஆலோசனை சேவை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தினை வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


18. சீதாவக்கை கங்கை நீர் மின்சார வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து செல்வதற்காக நிபுணர்களின் சேவையினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 46)


20 மெகா வொட் வலுவான மின் சக்தியினை வெளிவிடும் சீதாவக்கை கங்கை நீர் மின்சார வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து செல்வதற்காக நிபுணர்களின் சேவையினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை CECB க்கு வழங்குவதற்கு மின்சகத்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


19. துறைமுக மற்றும் கப்பல் துறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியிகை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 56)
துறைமுக மற்றும் கப்பல் துறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான ஜப்பானிய உபகரணங்களை வழங்குவதற்காக 1 பில்லியன் ஜப்பான் யென் வேலைத்திட்டமற்ற நிதியுதவியினை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த நிதியுதவியினை பெற்றுக் கொள்வது தொடர்பான பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


20. தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதி பொருட்களின் மீது அறவிடப்படுகின்ற வரியினை திருத்தம் செய்வதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைத்தல் (விடய இல. 57)


தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதி பொருட்களின் மீது அறவிடப்படுகின்ற வரியினை திருத்தம் செய்வதற்காக 2007ம் ஆண்டு 48ம் இலக்க விசேட வியாபார பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 10 வர்த்தமானி அறிவித்தல்களையும், 1962ம் ஆண்டு 19ம் இலக்க வருமானக் காப்புறுதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 02 வர்த்தமானி அறிவித்தல்களையும் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.