2017.03.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

 

01.கிராமிய அரசு எண்ணக் கொள்கைப்பத்திர வரைபு மற்றும் அலுவல் வரையறை (விடய இல. 06)

பொதுமக்களை நேரடியாக நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும் வகையில் 'கிராமிய அரசு' எனும் கொள்கையை நடைமுறைப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் துறை சார்ந்தோர் கொண்ட குழுவினால் 'கிராமிய அரசு எண்ணக் கொள்கைப்பத்திர வரைபு மற்றும் அலுவல் வரையறை' தயாரிக்கப்பட்டு, பாராளுமன்ற குழுக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் குறித்த விடயங்களை பிரசுரிப்பதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. Millennium Challenge Corporationவேலைத்திட்ட அலகொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 08)

இயங்கி வரும் பொருளாதார விருத்தியினை ஏற்படுத்துவதன் மூலம் உலகத்தில் வறுமையினை குறைத்துக் கொள்ள முடியும் எனும் நோக்கில் அமெரிக்காவில் இயங்கி வரும் Millennium Challenge Corporation நிறுவனமானது உலகளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் குறித்த இலக்கை அடைந்துக் கொள்வதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் குறித்த நிறுவனத்தின் சேவையினை எமதுநாட்டுக்கும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை 5 வருட காலத்துக்குள் முதலிடுவதற்கு அந்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இவ்வேலைத்திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தவதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக '“Millennium Challenge Corporation" வேலைத்திட்ட அலகொன்றை' பிரதமர் அலுவலகத்தின், கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. வரையறுக்கப்பட்ட ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தை (RALL) ஏலத்திலிடல் (விடய இல. 09)

வரையறுக்கப்பட்ட ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தை (RALL) ஏலத்திலிடுவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் குறித்த நிறுவனத்தை ஏலத்திலிடும் வரை அந்நிறுவனத்தின் இணைப்பு மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் நிதி தொடர்பான பொறுப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து தகுதியான தீர்வுகளை பிரேரிப்பதற்கும், வரையறுக்கப்பட்ட ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தில் பணிபுரிகின்ற தரைப்பாதுகாப்பாளர்களின் தொமில்பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு தேவையான சிபார்சுகளை முன்வைப்பதற்கும் சிரேஷ்;ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. குடிசன மதிப்பீடு – 2021 – அடிப்படை திட்டத்தினை தயாரிக்கும் கட்டம் (விடய இல. 11)

10 வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் குடிசன மதிப்பீடானது 10 வருடங்களின் பின்னர் 2021ம் ஆண்டு மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான அடிப்படை திட்டத்தினை தயாரிக்கும் பணிகள் கிராமிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனை 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவிகளை திரட்டடிக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. உயிரியல் தொழில்நுட்ப (Bio-Technology) புதிய உற்பத்தி பூங்கா ஒன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 16)

உயிரியல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உலகில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே குறித்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வரையறைகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள உயிரியல் தொழில்நுட்பம் (Bio-Technology) புதிய உற்பத்தி பூங்காவொன்றை ஸ்தாபிப்பதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஹோமாகம, பிட்பன பிரதேசத்தில் அமைந்துள்ள நினிதி தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான பூங்காவினுள் அரச – தனியார் துறையினரின் இணை அனுசரனையுடன் உயிரியல் தொழில்நுட்ப (Bio-Technology) புதிய உற்பத்தி பூங்கா ஒன்றினை ஸ்தாபிப்பது தொடர்பில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. மதுவரி அறிக்கை இலக்கம் 994 (இலக்கம் 1998/7 உடைய 2016-12-20ம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்) (விடய இல.18)

மதுவரி திணைக்களத்தின் மூலம் 2017ம் ஆண்டு வரை இலவசமாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்த 04 வகையான மது விற்பனை அனுமதிப்பத்திரங்களுக்கு 2017-01-01ம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் வகையில் 100,000 ரூபா வருடாந்த அனுமதிப்பத்திர கட்டணத்தை அறவிடுவதற்கும், போத்தலில் அடைக்கப்பட்ட கல்லிற்காக 50,000 ரூபா வருடாந்த அனுமதிபத்திர கட்டணத்தை அறவிடுவதற்குமாக வெளியிடப்பட்ட 994 இலக்க மதுவரி அறிக்கையானது பிரசுரிக்கப்பட்டுள்ள 2016-12-20ம் திகதியன்று, 1998/7ம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை ஜனநாயக சோஷலிசச் குடியரசுக்கும் மியன்மார் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்படுகின்ற உடன்படிக்கை (விடய இல. 22)

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை ஜனநாயக சோஷலிசச் குடியரசுக்கும் மியன்மார் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்படுகின்ற உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. நோர்வே அரசின் தொழில்நுட்ப பங்களிப்பாக நீண்ட கால மீன்பிடி கொள்கை மற்றும் நடைமுறைத் திட்டம் தயாரித்தல் - அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 23)

நோர்வே அரசின் தொழில்நுட்ப பங்களிப்பாக நீண்ட கால மீன்பிடி கொள்கை மற்றும் நடைமுறைத் திட்டம் தயாரித்தல் - அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. கடற்றொழில் கைத்தொழிலுக்கு பங்களிப்பு வழங்குவதற்கு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு மற்றும் ரஷ;யா அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் (விடய இல. 25)

கடற்றொழில் கைத்தொழிலுக்கு பங்களிப்பு வழங்குவதற்கு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு மற்றும் ரஷ;யா அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் ஒன்றில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபாhல சிறிசேன அவர்களின் ரஷ;ய சுற்றுப்பயணத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் (விடய இல. 26)

இடம்பெயர்ந்தோர் தொடர்பில் விசேட உறுப்புரைகளை உள்ளடக்கி சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கும் நீதியமைச்சர் கலாநிதி கௌரவ விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் (விடய இல. 28)

கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த அரச நிறுவனங்களின் மூலம் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, 2017ம் ஆண்டு அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு மேலதிகமாக முல்லைத்தீவு, காலி, மொனராகலை, இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்துவதற்கும், அதற்கு தேவையான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.இலங்கை மற்றும் செக் குடியரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட உள்ள வர்த்தக நடவடிக்கைகளின் போது பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை (விடய இல. 32)

இலங்கை அபிவிருத்தி உபாயமுறைகள், சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் செக் குடியரசின் சைத்தொழில், வர்த்தக அமைச்சு என்பவற்றுக்கு இடையில் மேற்கொள்ளப்பட உள்ள வர்த்தக நடவடிக்கைகளின் போது பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் இலங்கைக்கிடையிலான உற்பத்திக் கொள்வனவு தொடர்பான முதலீடு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 33)

சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் மற்றும் உபாய அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சு என்பவற்றுக்கு இடையில் முதலீடு மற்றும் உற்பத்திக் கொள்ளளவு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் உபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் - நடுக்குடா மின்சார செலுத்துகை மார்க்கத்தின் நிர்மானப்பணிகள் (விடய இல. 35)

பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் - நடுக்குடா மின்சார செலுத்துகை மார்க்கத்தின் நிர்மானப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,379.9 மில்லியன் ரூபாய்களுக்கு, அனுமதிக்கப்பட்ட விலை மனுக்கோரலின் அடிப்படையில் குறைந்த விலை மனுவினை வழங்கியுள்ள நிறுவனத்துக்கு வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. தம்புள்ளை மற்றும் கெப்படிபொல விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மையப்படுத்தி குளிர் அறைகளை நிர்மாணித்தல் - ஆலோசனை சேவை ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 37)

தம்புள்ளை மற்றும் கெப்படிபொல விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மையப்படுத்தி இரு குளிர் அறைகளை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை 2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் நிறைவு செய்வதற்கு ஏதுவான வகையில் குறித்த வேதை;திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள மதியுரையுர் பெறுகைச் சபையின் மூலம் 30.1 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு னுநளபைn ஊழளெரடவயவெ நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16.தேசிய இயந்திரசாதன நிறுவனத்தை (NEMO) வலுவூட்டல் (விடய இல. 33)

தேசிய இயந்திரசாதன நிறுவனத்திற்கு உரித்தான ஆற்றலை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகளுக்கு இணங்க விலைமனுக்கோரலின்றி தேசிய இயந்திரசாதன நிறுவனத்திற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் குறித்த நிறுவனத்தை வலுவூட்டுவதற்கும், அரசாங்க நிறுவனங்களின் ஊடாக இயந்திர சாதனங்களை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்கான வரையறையை 25 மில்லியன் ரூபாவிலிருந்து 50 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கொழும்பு பிரதேசத்தில் கழிவுநீர் முகாமைத்துவத்தினை மேம்பாடு செய்தல் (விடய இல. 40)

கொழும்பு பெரும்பாக நீர் மற்றம் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு செயற்றிட்டங்கள் மூன்றினை செயற்படுத்துவதற்கு 112.83 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த கடன் தொகையில் ஒரு தொகையினை பயன்படுத்தி கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட கிருலப்பனைப் பிரதேசத்தில் புதிய மலக் கழிவுநீர் வழிந்தோடும் கட்டமைப்பு, பிரதான உந்து குழாய்கள் மற்றும் உந்து நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 7,015.91 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் டுயசளநn ரூ வுழரடிசழ டுiஅவைநன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ராட்சி அமைச்சர் கௌரவ பைஸர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. களனிய பொலிஸ் நிலையம் நிருமாணிப்பதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தை ஆலோசனை நிறுவனமாக நியமனம் செய்தல் (விடய இல. 42)

களனிய பொலிஸ் நிலையம் நிருமாணிப்பதற்கான ஆலோசனை வழங்கும் நிறுவனமாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தை நியமனம் செய்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. பம்பலப்பிட்டி தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் மீள் அபிவிருத்தி (விடய இல. 43)

உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு 4-6 வார காலப்பகுதிக்குள் அபிவிருத்தி செய்பவர் இந்நாட்டுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் பம்பலப்பிட்டி தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் மீள் அபிவிருத்தி செய்வதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கும், அபிவிருத்தியாளருக்கும் இடையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துளை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் இடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசுக்கும் ரஷ்யா அரசுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 47)

இலங்கை விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும் ரஷ்யா கல்வி மற்றும் விஞ்ஞான அமைச்சுக்கும் இடையில் விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் கூட்டினைவு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ரஷ்ய விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன் மொழியப்பட்டுள்ள வட்டி மானியக் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 48)

2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் படி 12 கடன் திட்டங்கனை முன்னெடுப்பதற்கு முன்மொழியப்பட்டன. அவற்றினை ஆராய்ந்து சகல துளைகளையும் உள்ளடக்கக் கூடிய வகையில் 08 பிரதான கடன் திட்டங்களை அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக பின்வரும் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


22. அமெரிக்க ஐக்கிய குடியரசின் நொற்ரே டெம் (Notre Dame) பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீரியல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் (NARA) நிறுவனத்துடன் இருதரப்பு ஒப்பந்தம் (விடய இல. 49)

கடந்த 05 வருட காலத்தினுள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் நொற்ரே டெம் பல்கலைக்கழகமானது, இலங்கை தேசிய நீரியல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்துடன் இணைந்து வய்காள விரிகுடாவில் விசேட அவதானம் செலுத்தி சமுத்திர பல்கலைக்கழக வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. குறித்த திட்டத்தினை 2017ம் ஆண்டில் ஆரம்பித்து 05 வருட காலத்துக்கு செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் அமைச்சரின் அமெரிக்க ஐக்கிய குடியரசின் நொற்ரே டெம் (Notre Dame) பல்கலைக்கழக விஜயத்தின் போது அமெரிக்க ஐக்கிய குடியரசின் நொற்ரே டெம் (Notre Dame) பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீரியல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் (NARA) நிறுவனத்துடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. குற்ற ஒழிப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் என்பவற்றின் நிமித்தம் இலங்கை மற்றும் ரஷ;யா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 52)

குற்ற ஒழிப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் என்பவற்றின் நிமித்தம் இலங்கை மற்றும் ரஷஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ரஷ்ய விஜயத்தின் போது கைச்சாத்திடுவதற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் மற்றும் மகாவலி இடது கரைக்கீழ் ஆற்றுப்படுக்கை அபிவிருத்திக் கருத்திட்டம் என்பவற்றை முன்னெடுப்பதற்காக அபிவிருத்திக்கான சவூதி நிதியத்திடமிருந்து நிதியுதவியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 53)

வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் மற்றும் மகாவலி இடது கரைக்கீழ் ஆற்றுப்படுக்கை அபிவிருத்திக் கருத்திட்டம் என்பவற்றை முன்னெடுப்பதற்காக அபிவிருத்திக்கான சவூதி நிதியத்திடமிருந்து மொத்தமாக 273.75 மில்லியன் சவூதி ரியால் மதிப்பீட்டு தொகையினை பெற்றுக் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியுதவியினை பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களினை மேற்கொண்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. களுகங்கை நீர் வழங்கலை விரிபடுத்தும் கருத்திட்டம் (விடய இல. 54)

களுகங்கை நீர் வழங்கலை விரிபடுத்தும் கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு 31,810 மில்லியன் ஜப்பானிய யென் (கிட்டத்தட்ட 42,240 மில்லியன் ரூபா) கடன்தொகையொன்றை ஜய்கா நிறுவனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜய்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. வளர்ந்துவரும் பிராந்தியங்களில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டம் (விடய இல. 55)

வளர்ந்துவரும் பிராந்தியங்களில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 12,957 மில்லியன் ஜப்பானிய யென் (கிட்டத்தட்ட 17,369 மில்லியன் ரூபா) கடன்தொகையொன்றை ஜய்கா நிறுவனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜய்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் கலாசார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடல் (விடய இல. 57)

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் கலாசார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ரஷ்;ய சுற்றுப்பயணத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. பெற்றோல் மற்றும் டீசல் கொள்வனவு செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 58)

டீசல் (0.05மூ உச்சளவு சல்பர்) கொண்ட 4,200,000 பெரல்களையும், பெற்றோல் (92 Unl) கொண்ட 956,250 பெரல்களையும் கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால விலைமனுக்கோரலினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2017-03-01ம் திகதி முதல் 2017-10-31ம் திகதி வரையான 08 மாத காலத்துக்கு முறையே சிங்கப்பூரின் M/s Swiss Singapore Overseas Pte. Ltd. and M/s Gunvor Singapore Pte. Ltd. . ஆகியவற்றுக்கு வழங்குவது தொடர்பில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. 2016/17 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம் (விடய இல. 59)

2016/17 பெரும்போக காலப்பகுதியில் நாடு தழுவிய ரீதியில் 1.32 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட உள்ளது. அவற்றில் 73,500 மெட்ரிக் தொன் நெல்லினை 17 மாவட்டங்களில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கீரி சம்பா ஒரு கிலோகிராம் 41 ரூபாவிற்கும், நாடு ஒரு கிலோ கிராம் 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி. ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தினை மேம்படுத்தல் மற்றும் தர முயர்த்துவதற்கான கருத்திட்டம் (விடய இல. 60)

கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தினை மேம்படுத்தல் மற்றும் தர முயர்த்துவதற்கான கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை 9.5 மில்லியன் யூரோ ரூபாய்களுக்கு உட்பட்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் M/s KUHN International Project GmbH Co KG நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பற்றிய அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.