01. அரசியல் காரணங்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குதல் (விடய இல. 08)
அரசியல் ரீதியில் பல்வேறு காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதற்கு அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட அpதிகாரிகளை கொண்ட குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை கருத்திற் கொண்டு பழிவாங்கப்பட்டதாக குறிப்பிடப்படும் பொலிஸ் அதிகாரிகள் 129 பேரில் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இல்லாத பொலிஸ் அதிகாரிகளுக்காக துரித கதியில் அவர்களுக்கான சலுகைகளை/ நிவாரணத் தொகையினை வழங்குவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்போது பொலிஸ் சேவையில் பணிபுரியும் அதிகாரிகளின் சிரேஷ்டத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் சிபார்சுகளை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
02. நிதி நகரம் (Financial City – FC) (விடய இல. 09)
தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விசேட வேலைத்திட்டமாக கருதப்படும் நிதி நகர வேலைத்திட்டத்துக்கு தேவையான ஆளனிகளையும் வளங்களையும் திரட்டிக் கொண்டு பிரேரிக்கப்பட்டுள்ள நிதி நகரத்தின் அடிப்படை செயற்பாடுகளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் ஆரம்பிப்பதற்கும், நிதி நகரத்தை ஸ்தாபித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றுக்கு தேவையான சட்ட மூலங்களை மேற்கொள்வதற்கும், அதற்கு தேவையான சட்ட ஆலோசனை சேவையினை பெற்றுக் கொடுப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. ஒழுக்க விழுமியமுள்ள சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் சமய கேந்திர நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 14)
ஒழுக்க விழுமியமுள்ள சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் சமூகத்தினுள் சமய ரீதியில் முக்கியத்துவ மிக்க மத்திய நிலையங்களை தொடர்பில் கவனம் செலுத்தி மேற்குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், அவ்வேலைத்திட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் ஆகிய அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஜப்பான் ரூபவாஹினி நிகழ்ச்சிகளை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் (விடய இல. 15)
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 449 தொலைக்காட்சி கல்வியியல் அறிக்கை நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக வேண்டி 52.6 மில்லியன் ஜப்பானிய யென்களை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜப்பான் அரசாங்கத்துடன் குறித்த கடன் உதவி தொடர்பான பத்திரங்களில் கையொப்பம் இடுவதற்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்துடன் (JICA) பிரதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. சுவிஸ் சவால் நடைமுறைகளுக்கான வழிகாட்டல்கள் (விடய இல. 16)
பொருளாதார தொடர்பான அமைச்சரவை குழு செயற்குழுவின் சிபாரிசின் பெயரில், சுய விருப்புடன் முன்வைக்கப்பட்டுள்ள கோரப்படாத யோசனைகள் தொடர்பில் செயற்படும் போது நிதி அமைச்சின் மூலம் தயாரிக்கப்பட்ட சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுவிஸ் சவால் நடைமுறைகளுக்கான வழிகாட்டல்களை (Guidelines on Swiss Challenge Procedure) அரசாங்கத்தின் கொள்முதல் வழிகாட்டல்களாக உள்வாங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. இலங்கையில் டெங்கு நோய் தடுப்பும், கட்டுப்பாடும் சம்பந்தமான செயற்பாடுகளை பலப்படுத்தல் (விடய இல. 26)
நாடு தழுவிய ரீதியில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் டெங்கு நோய் தடுப்பும், கட்டுப்பாடும் சம்பந்தமான செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக பல்வேறுபட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் மனித வளங்களை அணிதிரட்டவும் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும், இவ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் மற்றும் வருகையாளர்கள் மத்தியில் தகவல் மற்றும் விளம்பரங்கள் பிரச்சாரம் செய்தல் (விடய இல. 27)
அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் மற்றும் வருகையாளர்கள் மத்தியில் தகவல் மற்றும் விளம்பரங்கள் பிரச்சாரம் செய்வதற்கு LCD தொலைக்காட்சி திரை வலை பின்னல் பலகைகளை ஸ்தாபித்தல் தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. நிதிச் சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான நிறுவனம் ஒன்றை நிறுவுதல் (விடய இல. 31)
நாட்டில் சிக்கல் நிலையில் காணப்படும் நிதி நிலைமைகளை முகாமை செய்யும் நோக்கில் நிதிச் சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நிறுவனத்தை நிறுவுவதற்கு தேவையான சட்ட ரீதியான ஆவணத்தை தயாரித்தல் உட்பட அந்நிறுவனத்தை நிறுவுவதற்கு தேவையான முன்னடவடிக்கைகளை செயற்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. செயற்திறன் மற்றும் திறன் முகாமைத்துவ அலகொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 32)
அரச முதலீட்டை வினைத்திறனாக மற்றும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான நிறுவனம் ஒன்று இன்மை பாரியதொரு குறையாக நோக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சின் பெயரில், அரசாங்கத்தின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தின் நிதியினை வினைத்திறனாக மற்றும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துகின்றதா என ஆராய்வதற்கென திறைசேரியின் கீழ் இயங்கும் செயற்றிறன் மற்றும் திறன் முகாமைத்துவ அலகொன்றை (Performance and Efficiency Unit – PEM Unit) ஸ்தாபிப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 35)
2016 சிறுபோகத்தில் நெல் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயகளிடத்தில் இருந்து நெல்லினை நேரடியாக கொள்வனவு செய்வதற்கும் அவர்களை முறையான முறையில் பதிவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. உரிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்/ மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் ஆகியோர்களின் ஊடாக அது தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 2016 சிறுபோகத்தின் போது கீரி சம்பா நெல் கிலோ கிராமொன்றுக்கு 50 ரூபா, சம்பா நெல் கிலோ கிராமொன்றுக்கு 41 ரூபா, நாடு நெல் கிலோ கிராமொன்றுக்கு 38 ரூபா எனும் வீதத்தில் கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி. ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சிறப்பு வைப்புக்கணக்கு சட்டம் (விடய இல. 37)
அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசாவினை வழங்க 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டி உள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தின் மூலம் 300,000 அமெரிக்க டொலர்களை இங்கு முதலிடும் முதலீட்டாளர்களுக்கு 10 வருட வதிவிட விசாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதற்காக குறித்த தொகையினை 10 வருட காலத்துக்கு குறித்த சிறப்பு வைப்புக்கணக்கில் பேண வேண்டும். பல நன்மைகளை கொண்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கையின் உயர் தரமான அரும்பொருட்களை சர்வதேச கண்காட்சிக்காக எடுத்துச் செல்லல் (விடய இல. 39)
இலங்கையில் காணப்படும் அரும்பொருட்களின் மகிமையையும், பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் நாட்டின் அரச தலைவர்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களின் இணக்கப்பாட்டின் பின்னர், குறித்த அரும்பொருட்களை வெளிநாடுகளில் காட்சிப்படுத்துவதற்கும், வெளிநாடுகளில் கண்காட்சிப்படுத்துவதற்கு தெரிவு செய்யப்படுவதற்கு முதலில் அவ் அரும் பொருட்களின் பிரதி மாதிரிகளைத் தயார்படுத்தி அதனை வழங்கல் பொருத்தம் என உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் காலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. ரொபோ பயன்பாட்டு சிறப்பு நிலையம் ஒன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 41)
ரொபோ தொழில்நுட்பத்தில் காணப்படும் அதிதி நன்மைகளை கருத்திற் கொண்டு அரச மற்றும் தனியார் பிரிவுகளின் ஒத்துழைப்புடன் ரொபோ பயன்பாட்டு சிறப்பு நிலையம் ஒன்றினை (Centre of Excellence in Robotic Applications – CERA) இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிசாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. மேல் மாகாண பாரிய நகர வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் நகரம் (Smart City) ஒன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 44)
மேல் மாகாண பாரிய நகர வேலைத்திட்டத்தின் கீழ் அத்தியவசிய துறை ஒன்றாக ஸ்மார்ட் நகரம் (Smart City) ஒன்றிற்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது இணங்காணப்பட்டுள்ளது. பல நன்மைகளை கொண்ட குறித்த நகரத்தினை அமைப்பதற்காக பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் மேல் மாகாண பாரிய நகர வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் நகரத்திற்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவியை பெற்றுக் கொள்வதற்காக தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அநுபவம் நிறைந்த சர்வதேச நிர்வனமான சீமென்ஸ் நிர்வனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுக்கு வருவதற்கு பாரிய நகர மற்றும் பேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. மேல் மாகாண பாரிய நகர வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக சபையுடன் உதவியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 45)
மேல் மாகாண பாரிய நகர வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக சிங்கப்பூர் அரசின் வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் வர்த்தக நிர்வனமான சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாரிய நகர மற்றும் பேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16. தம்புள்ளையில் அமைந்துள்ள காணியை குளிர் களஞ்சிய அறையொன்று அமைப்பதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சிற்கு வழங்குதல் (விடய இல. 46)
குளிர் களஞ்சிய அறையொன்று அமைப்பதற்காக, தம்புள்ளையில் அமைந்துள்ள 188 பேர்ச் காணியை அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகின்ற நிகழ்கால சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சிற்கு வழங்குவதற்கு பாரிய நகர மற்றும் பேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17. ஜப்பானில் மேம்பட்ட விவசாயத் தொழில் நுட்பத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தின் வல்பிட்ட பண்ணையில் ஒரு அதி தொழில் நுட்ப விவசாயப் பயிற்சி நிலையத்தை தாபித்தல் (விடய இல. 50)
ஜப்பானில் மேம்பட்ட விவசாயத் தொழில் நுட்பத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தின் வல்பிட்ட பண்ணையில் ஒரு அதி தொழில் நுட்ப விவசாயப் பயிற்சி நிலையத்தை தாபிப்பதற்கு Japan Lanka Agriculture Industrial Research and Training Center (Pvt) Ltd. நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே குறித்த பணி தொடர்பில் அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுக்கு வருவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
18. தேசிய உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதன அமைப்பை (NEMO) வலுவூட்டல் (விடய இல. 54)
அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்காக பிரதேச மட்டத்தில் மண் வெட்டும் இயந்திரங்கள் உட்பட மற்றைய அத்தியவசிய உபகரணங்களை வழங்கும் தேசிய உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதன அமைப்பானது 1992ம் ஆண்டு தாபிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் பெறப்பட்ட அனுமதியின் படி குறித்த அரச நிர்வனங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுமாணப்பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வாடகைக்கு வாகனங்களை பெறல் மற்றும் தெரிவு செய்யப்படும் குறிப்பிடப்பட்ட ஒப்பந்தங்களை வழங்குவதற்கும் தேசிய உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதன அமைப்பின் சேவையினை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19. அரசாங்க வைத்தியசாலைகளுக்காக இறப்பர் பாலினால் உள்நாட்டு மட்டத்தில் உற்பத்தியான சத்திர சிகிச்சை கையுறைகளை கொள்முதல் செய்தல் (விடய இல. 64)
அரசாங்க வைத்தியசாலைகளுக்காக இறப்பர் பாலினால் உள்நாட்டு மட்டத்தில் உற்பத்தியான சத்திர சிகிச்சை கையுறைகளை கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபார்களின் பெயரில் தேசிய இறப்பர் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்;சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
20. வத்தளை உத்தேச பிரதேச செயலக நிர்மாணிப்பு (விடய இல. 65)
பல்வேறு தேவைகளினை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் 198.8 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் வத்தளை உத்தேச பிரதேச செயலக சூழல் மற்றும் புதிய ஐந்து மாடி கட்டிடத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் உள்நாட்டலுகல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
21. மஹியங்கனை பிரதேச செயலகத்திற்கான புதிய இரு மாடி கட்டிட நிர்மாணிப்பு (விடய இல. 66)
பல்வேறு தேவைகளினை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் 221 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மஹியங்கனை பிரதேச செயலகத்திற்கான புதிய இரு மாடி கட்டிடத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் உள்நாட்டலுகல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
22. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கான புதிய இரு மாடி கட்டிட நிர்மாணிப்பு கட்டம் - 11 (விடய இல. 67)
பல்வேறு தேவைகளினை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் 565.5 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கான புதிய இரு மாடி கட்டிட நிர்மாணிப்பு கட்டம் - 11 இனை மேற்கொள்ள உள்நாட்டலுகல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
23. குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டங்களை வலுப்படுத்தும் நிலையத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 68)
உத்தேசிக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டங்களை வலுப்படுத்தும் நிலையத்தினை 327 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கட்டுமாண திணைக்களத்தின் மூலம் வரையப்பட்டுள்ள வரைபடத்தின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தின் கட்டானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட களுதியவலவத்தை பகுதியில் உள்ள இடம் ஒன்றில் நிர்மாணிப்பதற்கு உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
24. அரசாங்க அலுவலர்கள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் விடுதி வசதிகளை வழங்கும் பொருட்டு கட்டிடங்களை நிர்மாணித்தல் (விடய இல. 70)
அரசாங்க அலுவலர்கள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் விடுதி வசதிகளை வழங்கும் பொருட்டு கட்டிடங்களை நிர்மாணிக்கும் திட்டத்தில் கீழ் தெரிவு செய்யப்பட்ட 05 மாவட்டங்களில், திருமணமான மற்றும் திருமணமாகாத நபர்களுக்கு உகந்த விதத்தில் வேறு வேறாக 05 கட்டங்களில், 05 வருடங்களுக்குள் நிர்மாணிக்கும் வகையில் குறித்த திட்டத்தை முன்னெடுக்க அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
25. இலங்கை விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்தல் (விடய இல. 80)
நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தம் நோக்கில் ஓர் அரசிடமிருந்து பிறிதொரு அரசுக்கு பொருள் கொள்வனவு செய்யும் அடிப்படையின் கீழ் (Government to Government Basis) போர் விமானங்கள் வழங்கும் ஆர்வம் கொண்ட விமான உற்பத்தியாளர்கள், உதவி உற்பத்தியாளர்கள், அதிகாரம் பொருந்திய அரச அதிகாரிகள் மூலம் விருப்பத்தின் அடிப்படையில் (Expressions of Interest) இலங்கை விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
26. அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு மற்றும் அதனால் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் அறிக்கையிடுவதற்கு குழுவொன்றினை நியமித்தல் (விடய இல. 82)
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து, அதனால் ஏற்பட்டுள்ள சொத்து சேதங்கள் தொடர்பில் மதிப்பிடவும், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள் மற்றும் மீனவக் குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியாக இனங்காண்பதற்கும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈடு தொடர்பில் சிபார்சுகளை பெற்றுக் கொள்வதற்கும் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.