01. “இ - மோட்டரின் கருத்திட்டம்” மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (விடய இல. 09)

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினை நவீன மயப்படுத்தும் நோக்கில் மூன்று பிரிவுகளின் கீழ் இ - மோட்டரின் கருத்திட்டத்தினை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழுவின் முன்மொழிவுக்கு இணங்க இ - மோட்டரின் கருத்திட்டத்தினை BOT அடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. சாலாவ இராணுவப் படை முகாமின் ஆயுதக் களஞ்சியம் வெடித்ததனால், பிரதேச மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பிரேரணைகள் (விடய இல. 11)

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட விபத்தினால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் குடும்பங்களுக்காக அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பி வரும் வரை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 50,000 ரூபா வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இதுவரை 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே முழு அளவிலான பாதிப்புக்கள், பகுதியளவிலான பாதிப்புக்கள் மற்றும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஏனைய குடும்பங்களுக்கும் 50,000 ரூபா வீதம் வழங்குவதற்கும், அசையும் சொத்துக்களின் சேதங்கள் தொடர்பில் நட்டஈடுகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட குழுவின் சிபார்சுகளை பெற்று துரித கதியில் செயற்படுவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. பாரம்பரிய சுதேச வைத்திய ஆராய்ச்சி வைத்தியசாலை மற்றும் மூலிகைத் தோட்டத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 13)

தொம்பே பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள “வெதகம” மாதிரி கிராமத்தில் பாரம்பரிய சுதேச வைத்திய ஆராய்ச்சி வைத்தியசாலை மற்றும் மூலிகைத் தோட்டத்தினை நிர்மாணிப்பதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. மேற்கத்திய பாரிய நகர பிராந்தியத்தினுள் மழை நீர் வடிகாலினை திருத்தியமைத்தல் (விடய இல. 19)

மேற்கத்திய பாரிய நகர பிராந்தியத்தினுள் மழை நீர் வடிகாலினை திருத்தியமைப்பதற்காக 08 வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. அவற்றினை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. தேயிலை சக்தி நிதியத்தின் மறுசீரமைப்பு (விடய இல. 20)

தேயிலை சக்தி நிதியத்தின் கீழ் இருக்கும் 12 தொழிற்சாலைகளின் முகாமைத்துவத்தை அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் தேயிலை சக்தி நிதியத்தின் மறுசீரமைப்பதற்கு உருவாக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் சிபார்சினை பெற்று குறித்த நிதியத்தினை மறுசீரமைப்பதற்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. இலங்கையில் பொறியியல் துறையினை வரையறுத்துக் கொள்வதற்காக பொறியியல் துறை சார்ந்தோரை பதிவு செய்து பொறியியல் சபையொன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 22)

இலங்கையில் பொறியியல் துறையினை வரையறுத்துக் கொள்வதற்காக பொறியியல் துறை சார்ந்தோரை பதிவு செய்து பொறியியல் சபையொன்றினை ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ​தேவையான சட்டத்திட்டங்கள் அடங்கிய இலங்கை பொறியியலாளர் சபை சட்ட மூலம் ஒன்றினை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் அனுமதியினை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்கள் மற்றும் பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழாவினை 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 23)

2017 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழாவினை 2017 ஆம் ஆண்டு மே மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கையில் நடாத்துவதற்கும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான குழுவொன்றினை அமைப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் புத்தசாசன அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷஅவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.​

08. 1979 ஆம் ஆண்டில் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையைத் திருத்தஞ் செய்தல் (சட்டத்தரணி உதவியை நாடுவதற்கான சிறைச் கைதிகளின் உரிமைகள்) (விடய இல. 24)

சட்டத்தரணி உதவியை நாடுவதற்கான சிறைச் கைதிகளின் உரிமைகள் தொடர்பான 1979 ஆம் ஆண்டில் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையைத் திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் அனுமதியினை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அமைச்சரவையின் மூலம் கவனத்திற் கொள்ளப்பட்டது.

09. பிரதான சட்டவாக்கங்களைத் திரட்டுதல் (விடய இல. 25)

நீதியை அணுகுவதற்கு அவகாசம் இருப்பது எந்தவோர் ஆளினதும் பிரதான மற்றும் அடிப்படை உரிமையொன்றாகும். இவ்வுரிமையை ஏற்றுக் கொள்ளாமை ஆளொருவரினது அடிப்படை மற்றும் மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்படுதலாகக் கருதப்படுகின்றது. இந்த நிலைமைக்கு தீர்வொன்றாக அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அவ்வாறான சொற்கள் மற்றும் வாக்கியங்களை தற்காலத்துக்கு ஏற்றாற் போல் உகந்த மொழிகளை பயன்படுத்தி மாற்றீடு செய்வதற்கு அல்லது அதனை முழுமையாக செம்மைபடுத்துவதற்கு நீதியமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தஞ் செய்தல் (விடய இல. 26)

குற்றச்செயல் தொடர்பான சாட்சியங்களை இலங்கைக்கு வெளியே செய்கை அமைவிடமொன்றிலிருந்து பெற்றுக் கொடுப்பதற்கும், சமகால கட்புல செவிப்புல இணைப்பின் ஊடாக சாட்சியங்களை அல்லது கூற்றுக்களை பதிவு செய்வதற்கும், அவ்வாறு சாட்சியங்களை வழங்கும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதராலயமொன்றிலிருந்து பெற்றுக் கொடுப்பதற்கும், அவ்வாறு சாட்சியங்கள் வழங்கும் நபர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் உகந்த வகையில் 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு நீதியமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கடலில் உயிர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒத்துழைப்பின் பிரகாரம் புதிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 28)

குடலியல் துறை சார்ந்தோர் அனைவருடனும் கலந்தாலோசித்து பின்னர் தயாரிக்கப்பட்ட கடலில் உயிர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒத்துழைப்பின் பிரகாரம் புதிய சட்ட திட்டங்களை சட்ட வரைஞர் குழுவின் மூலம் சட்ட மூலம் ஒன்றை வரைவதற்கும் பின்னர் அதனை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியினை பெறுவதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. நீண்ட காலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஆட்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்துதல் (விடய இல. 32)

நீண்ட காலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஆட்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அதன் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோரின் இணைத்தலைமையில் மற்றும் குறித்த மாகாணங்களின் பிரதானிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரினை உள்ளடக்கிய செயலணியொன்றினை அமைத்து அதன் சிபார்சின் பெயரில் நடவடிக்கைகளினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்றம் 2016 பற்றிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் - முன்னாள் அச்சுறுத்தலுக்குள்ளான கிராமங்களிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கும் மீளத் திரும்பிய அகதிகளுக்கும் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (விடய இல. 33)

முன்னாள் அச்சுறுத்தலுக்குள்ளான கிராமங்களிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கும் மீளத் திரும்பிய அகதிகளுக்கும் அவர்களின் வாழ்க்கைக்கு அத்தியவசியம் என்று கருதும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த இவ்வேலைத்திட்டங்கள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்களை அமைச்சரவை கவனத்திற் கொண்டது.

14. அரச கரும மொழிக் கொள்கையை வினைத்திறனாக அமுல்படுத்த வருடாந்த வரவு செலவு மதிப்பீட்டில் விசேட தலைப்பை ஏற்படுத்தல் (விடய இல. 34)

2020 ஆம் ஆண்டளவில் நபர் ஒருவர் தமக்கு விருப்பமான மொழியில் தமது தேவைகளை ஆற்றுவதற்கு வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில், அரச கரும மொழிக் கொள்கையை செயற்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டிலிருந்து அரசின் அனைத்து அமைச்சுக்களும் வரவு செலவு மதிப்பீட்டில் விசேட தலைப்பை ஏற்படுத்துவதற்கு தேசிய சக வாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேஷன் அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15. வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பழைய பதிவேட்டகக் கட்டடத்தை குத்தகைக்கு விடுதல் (விடய இல. 37)

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பழைய பதிவேட்டகக் கட்டடத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரின் தலைமையில் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவினை அமைத்து, குறித்த கட்டடத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வெளிவிவகார அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. கதுறுவலை பட்டின விஸ்தரிப்புச் செயல் திட்டம் - கட்டநிலை 1 (விடய இல. 42)

கதுறுவலை பட்டின விஸ்தரிப்புச் செயல் திட்டம் - கட்டநிலை 1;இன் கீழ் காணி அபிவிருத்தி வேலை மற்றும் வரைபு அத்துடன் கட்டும் ஒப்பந்தத்தை, காணியல் முறைமை தாபித்தல் உட்பட ஒரு பகுதி அண்ணளவாக 25 ஏக்கர் காணியின் நிரப்பல் வேலையுடன் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. கலாச்சார விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு பயன்படுத்துவதற்காக வேண்டி யானைகள்/ யானை குட்டிகள்/ பெண் யானைகள் 35இனை கொண்ட குழுவினை மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கீழ் பராமரித்தல் (விடய இல. 50)

கலாச்சார விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தும் நோக்கில் பின்னவல யானை சரணாலயம் மற்றும் தேவையேற்படும் போது உடவலவயிலிருந்தும் யானைகள்/ யானை குட்டிகள்/ பெண் யானைகள் 35 இனை கொண்ட குழுவினை மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்ல நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது.