01. “புனருதயம்” சூழல் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் - 2016 – 2018 (விடய இல 06)

நிலையான சூழல் ஒன்றை இலங்கையில் ஏற்படுத்தும் நோக்கில் சூழல் பாதுகாப்பு தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களினதும் துணையுடன் திட்டமிட்டு அதன் கீழ் கீழ்வரும் பிரச்சினைகளுக்கு மூன்று வருட கால எல்லைக்குள் தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.அ. சூழல் மாசடைதலை முகாமைத்துவம் செய்தல்
- “நிகசல லங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் 2018 ஆண்டு ஆகும் போது முறையான குப்பை முகாமைத்துவம் கொண்ட நாடாக இலங்கையை ஏற்படுத்தல்
- “நிகசல புறவர” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் குப்பை முகமைத்துவம் செய்தல்.
- “ஹரித வெரல” வேலைத்திட்டம் மூலம் இலங்கையின் கரையோரத்தில் 15 கிலோ மீட்டர் பரப்பினை அழகான கடற்கரை பரப்பாக மாற்றுதல்.
- “சுனில சயுர” வேலைத்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டாகும் போது நாடு முழுவதும் அமைந்துள்ள சமுத்திரத்தினை மாசடையாத வலயமாக மாற்றுதல்.
- “பிரிசுது வாயு தீகயு” வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் நகரங்கள் மற்றும் கிராமங்களை அண்டிய பகுதிகளில் மாசடையாத வாயு மண்டபத்தை உருவாக்குதல்.
- “ஜனதிவி நகின ஜல நகவறண” வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் சுத்தமான நீரினை பெற்றுக் கொடுத்தல்.

ஆ. வனப்பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி
- “வன ரோபா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 6,000 ஹெக்டேயாரினால் காட்டுப்பகுதியினை அதிகரித்தல்.
- “வன அறண - றெகவரண” வேலைத்திட்டத்தின் கீழ் 6,000 கிலோ மீட்டர்ஃ 25,000 ஹெக்டேயார் காட்டினை அளந்து அதனை கணிப்பிட்டு பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- “வன சறண” வேலைத்திட்டத்தின் கீழ் சூழல் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல்.
இ. இட முகாமைத்துவம்
- “ஹயன சயன” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டளவில் பல்வேறு மாசுப்பாட்டின் காரணமாக இடம்பெறுகின்ற மண்ணரிப்பு மற்றும் நிலச் சிதைவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தல்
- “கெசேம பூமி” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டளவில் அனைத்து நீர்ப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதும் மற்றும் நீர்ப்பிடிப்பு பிரதேசங்களை மாசடைவில் இருந்து தடுத்தலும்.
- “கணீம் பிம் பிரதி நிர்மாணய” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டளவில் மாணிக்க மற்றும் மண் மற்றும் உலோக மேலும் ஏனைய கனிம அகழ்வுப் பிரதேசங்களை மீளமைத்தல்.
- “தேசகுண அணுஹ{று கம்மான” பூமி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டளவில் ஐம்பது கால நிலை இசைவாக்கல் கிராமங்களை உருவாக்குதல்.
ஈ. வன ஜீவிகள் - மனிதன் மோதல்
- அச்சுறுத்தலுக்குள்ளான இனங்களை மீட்டெடுத்தல் மற்றும் மனித – வனஜீவி இணையிருப்பு ஆகியவற்றுக்கான “வனஜீவி புணரன்ஞன விதேசதஹன” மற்றும் “ஜனவறன றெகவறன” ஆகிய தேசிய நிகழ்ச்சித் திட்டங்கள் மேற் கூறப்பட்ட துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
உ. உயிரியல் வளப் பாதுகாப்பு
- உயிரியல் திருட்டினைக் கட்டுப்படுத்துவதற்காக “ஜய்வ சம்பத் ஹறன வாறன” தேசிய நிகழ்ச்சித் திட்டம் மேற்கூறப்பட்ட துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
- “வன ஜீவி புணர்ஜனன” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டளவில் அச்சுறுத்தலுக்குள்ளான 05 இனங்களை மீட்டெடுத்தல்.
ஊ. சூழல் பாதுகாப்புடன் தொடர்பான நிர்வனங்களை போசித்தல்
- இலங்கையின் அனைத்து மாவட்டங்கள்/ பிரதேச செயலகங்கள்/ கிராமங்கள் ஆகியவை உள்ளடக்கப்படும் வகையில் “பத்ததி பிரதிநிர்மாணய” அமைத்தல்
- “சூழலியல் பொலிசாரை” வலுப்படுத்தல், சூழலியல் பாதுகாப்பு தொடர்பில் தேசிய சபை ஒன்றை நிறுவுதல்.
- சூழலியல் பிரச்சினை தொடர்பில் பொது மாக்களை அறிவுறுத்தல் மற்றும் அவற்றுக்கு தீர்வு காணும் போது பொது மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை நோக்காக கொண்டு “ஜன அந்தஹறய” வேலைத்திட்டத்தை செயற்படுத்தல்.
இம் மூன்று வருட வேலைத்திட்டங்களை செயற்படுத்த 22,547 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை 2015 ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பித்து செயற்படுத்த கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016 - 2018 (விடய இல. 07)
இலங்கையின் பிரதான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 200 பில்லியன் ரூபாய்கள் வரை செலவிடப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த உணவுப் பொருட்களை எவ்வித விசக்கிருமிகள் இன்றி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வதற்கான அவகாசம் இங்கு நிறையவே உள்ளன. இதனடிப்படையில் இதனுடன் தொடர்புபட்ட குறித்த அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிர்வனங்களின் ஒத்துழைப்புடன் 2016 – 2018 காலப்பிரிவினுள் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் அதற்காக 15,595 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை 2015ம் ஆண்டின் பெரும்போக செய்கையுடன் ஆரம்பித்து 2016 – 2018 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதியில் முன்னெடுக்க கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. 1983 கலவரத்தின் போது வீடுகளை இழந்து தற்போது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட விக்டோரியா வலயத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக வேண்டி இடம் மற்றும் வீடுகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 10)

திகன, ரஜவெல்ல பகுதியில் வசித்து வந்த, 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது இடம்பெயர்ந்த 134 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு, அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக அபகோட்டை பிரதேசத்தில் வீட்டுத்திட்டம் ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டது. அதில் நிறையவே குறைப்பாடுகள் காணப்படுகின்றன. 30 ஆண்டுகள் பூர்த்தியான நிலையிலும் இன்னும் குறித்த வீடுகளுக்காகவும் காணிகளுக்காகவும் உரித்துகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு முறையான முறையில் மின்சார வசதிகள் குடிநீர் வசதிகளை பெற முடியாத நிலை உள்ளது. குறித்த மக்களின் இரண்டாம் பரம்பரையினருக்கு மகாவலி அதிகார சபைக்கு உரித்தான கட்டி பிரதேசத்தில் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதே போன்று முதலில் குறிப்பிடப்பட்ட 134 குடும்பங்களையும் கட்டி பிரதேசத்தில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மலையக புதிய கிராம, அடிப்படை வசதிகள் மற்றும் பொது மக்கள் அபிவிருத்தி அமைச்சுக்கு ஒப்படைக்க மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சிறுவர் செயற்பாடுகளை மதிப்பிடல் - 2015ஃ16 (விடய இல. 11)
குறித்த மதிப்பீட்டை 2015/2016 காலப்பகுதியில் மேற் கொள்ள 26,123,469 ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை சர்வதேச தொழில் அமைப்பு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. தொகைமதிப்பு புள்ளிவபர திணைக்களத்தின் மூலம் இம்மதிப்பீட்டை வழங்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பவற்றுக்கிடையில் சுங்க விடயங்கள் தொடர்பில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான உடன்படிக்கை (விடய இல. 16)
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்குமிடையில் சுங்க விடயங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான உத்தேச உடன்படிக்கை தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனி லிமிடட் (புமுஊஊஊடு) நிலையான வைப்புதாரிகளுக்கு மீண்டும் வழங்குதல் (விடய இல. 18)
கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மீள செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 2-10 மில்லியன் இடைப்பட்ட தொகையினை வைப்பிலிட்ட வைப்புதாரிகளுக்கு மீண்டும் செலுத்துவதற்காக 3,945.6 மில்லியன் ரூபாவினை திறைசேரியில் இருந்து இலங்கை மத்திய வங்கியிடமிருந்து விடுவிக்கவும், கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனி லிமிடட்டின் சொத்துக்களை ஏலத்தில் விற்று குறித்த பணத்தை திறைசேரிக்கு மீண்டும் செலுத்துவதற்கு நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. உயிரோடு இருப்பவர்களின் தகவல்கள் அடங்கிய ஆட்கள் தொடர்பான தரவுகளடங்கிய முறைமையொன்றை தாபித்தலும் மின்சார தொழில்நுட்பத்தினாலான அடையாள அட்டைகளை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்வதற்காக 1968 இன் 32 ஆம் இலக்க இலக்க ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தை திருத்தம் செய்தலும் (விடய இல. 19)
உயிரோடு இருப்பவர்களின் தகவல்கள் அடங்கிய ஆட்கள் தொடர்பான தரவுகளடங்கிய முறைமையொன்றை தாபிப்பதற்கும் மின்சார தொழில்நுட்பத்தினாலான அடையாள அட்டைகளை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்வதற்காக 1968 இன் 32 ஆம் இலக்க இலக்க ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும் தேவையான நடைமுறைகளை மேற்கொள்வதும் அதற்கான சட்ட வரைபை பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. ஆதிவாசிகளின் அபிவிருத்திற்காக வேண்டி தபான மக்கள் உரிமை கேந்திர நிலையத்தின் புனருத்தாபனம் மற்றும் அங்கு அன்றாட விவகாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேண்டி மாதாந்த கொடுப்பனவு ஒன்றை மேற் கொள்ளல் (விடய இல. 20)
ஆதிவாசிகளின் அன்றாட விவகாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆதிவாசிகளின் உரிமை கேந்திர நிலையத்துக்கு மாதாந்தம் ஒதுக்கும் ரூ.100,000 தொகையை ரூ.125,000 ஆக உயர்த்த உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனம், தேசிய கடதாசி நிறுவனம், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சீமெந்து வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகியவற்றில் கடமை புரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கொடுப்பனவு செய்தல் (விடய இல. 21,22 மற்றும் 23)
வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனம், தேசிய கடதாசி நிர்வனம், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சீமெந்து வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகியவை தமது ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் இயங்கி வருவதாகவும் அவை தமது அன்றாட தொழிற்பாடுகளை கூட சரிவர செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரி~hத் பதியூதீன் மூலம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனவே இது தொடர்பில் அமைச்சரவை ஆராய்ந்து குறித்த ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள நிலுவையை இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் வழங்குவதற்கு தேவையான நிதியினை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி அளித்தது.

10. பொறியியலாளர்களை பதிவு செய்வதன் மூலம் இலங்கையில் பொறியிலாளர்களின் தொழில் துறையை வரையறுப்பதற்காக வேண்டி பொறியில் கவுன்சில் ஒன்றை நிறுவுதல் (விடய இல. 24)
தகுதி வாய்ந்த பொறியியலாளர்களை பதிவு செய்து அவர்களின் தொழில் துறையை பலப்படுத்தும் நோக்கில் குறித்த தரப்பினருடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சர்வதேச கடற்றொழில் நவடிக்கைகள் சம்பந்தமான சட்ட திட்டங்களை மீறுவோர்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் ஆலோசனைகள் (விடய இல. 26)
சர்வதேச கடற்றொழில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மீநவர்கள் தம் கடற் றொழிலாளர்களை நிர்வகிக்கும் போது ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக இலங்கைக்கு ஐரோப்பிய சங்கத்தின் மீன் உற்பத்திகளின் ஏற்றுமதி செய்வதற்கான தடை 2015 ஜனவரி மாதமளவில் விதிக்கப்பட்டது.கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தற்போது இத்தடையை நீக்குவதற்கான திட்டம் ஒன்றை செயற்படுத்தி வருகின்றது. அதே போன்று சர்வதேச கடற்றொழில் நடவடிக்கைகள் சம்பந்தமான குற்றங்களுக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை சர்வதேச அங்கீகாரத்துக்கு அமைவாக முறையாக மேற்கொள்ளவும், தவறு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிடிக்கப்பட்ட மீன்களின் பெறுமதியைப் போன்று ஐந்து மடங்குக்கு அமைவாக தண்டனை வழங்குதல் மற்றும் படகுகளின் நீளத்துக்கு அமைய வழங்கப்படும் தண்டனை தீர்மானிக்கும் போது பெரிய அளவிலான குற்றங்களுக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்குவதற்கும், மீன் உற்பத்தி இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைக்கு தண்டனை குறிப்பிட்ட மீன்களின் தொகையின் பெறுமதியைப் போன்று ஐந்து மடங்குக்கு அமைவாக பெருந்தக் கூடியவாறு அதிகரிப்பதற்கும், தற்போது கடற்றொழில் சட்டத்தின் விதிமுறைக்கு வெளியிடப்படாத நிர்வாகத் தண்டனை வழங்குவதற்கான முறையை அறிமுகப்படுத்துவதற்கும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கை மின்சார சபையிலும் இலங்கை மின்சார தனியார் கம்பனியிலும் இருக்கின்ற பாவனைக்கு ஒளவாத உடைந்த மின்மாற்றிகள் மற்றும் ஏனைய உடைந்த உருக்கு, இரும்புக் கம்பிகள் என்பவற்றை அகற்றுதல் (விடய இல. 29)
சுற்றாடலை மாசுபடுத்துகின்ற பதார்த்தங்கள் இல்லை என இனங்கண்டறியப்படும் மின்மாற்றிகளையும் மற்றும் ஏனைய உடைந்து நொருங்கிய பொருட்களையும் சிறு மற்றும் நடுத்தர அளவான கைத்தொழில் உரிமையாளர்களுக்கு மூலப்பொருட்களாக விநியோகிக்கும் வகையில் குறித்த கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு அவசியமான உடைந்த மின்மாற்றிகளையும், ஏனைய உடைந்து நொருங்கிய பொருட்களையும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவியுடன் நிர்ணயித்து, அந்த உடைந்து நொருங்கிய பொருட்களை தற்பொழுது பிரயோகத்திலுள்ள விலைச் சூத்திரத்திற்கு இணங்க கணிப்பிட்டு கைத்தொழில் அபிவிருத்தி சபைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும், கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு தேவiயான மின்மாற்றிகளையும் மற்றும் ஏனைய உடைந்து நொருங்கிய பொருட்களையும் நிர்ணயிக்கும் வரை தற்பொழுது களஞ்சியசாலையில் குவிந்திருக்கின்ற மின்மாற்றிகளையும் ஏனைய உடைந்து நொருங்கிய பொருட்களையும் அரசாங்கத்தின்கொள்வனவு வழிகாட்டல்களுக்கு இணங்க உள்நாட்டு ரீதியில் கேள்வி விலை மனுக்கள் வழைத்து துரித கெதியில் விற்பனை செய்யும் வகையில் இலங்கை மின்சார சபைக்குஃ இலங்கை மின்சார (தனியார்) கம்பனிக்கு அதிகாரம் அளிப்பதற்கும் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - மத்திய மாகாணத்தில் ஒன்பது சிவில் வேலைகள் ஒப்பந்தப் பொதிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அனுமதியளித்தல் (விடய இல. 39)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - மத்திய மாகாணத்தில் ஒன்பது சிவில் வேலைகள் ஒப்பந்தப் பொதிகளுக்கான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் குழுவின் சபார்சின் பெயரில் குறித்த கம்பனிகளிடம் வழங்க பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்~;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலையின் பிரிவு 111 இன் கெரவலபிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான பகுதியின் (9.32 கி.மீ) வேலைகளுக்கான நோக்கெல்லையில் மாற்றங்களை செய்வதற்கு அனுமதியளித்தல் (விடய இல. 40)

கேரவலபிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான வெளிச்சுற்றுவட்ட நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை 66.69 பில்லியன் ரூபாய்களுக்கு சீன நிர்வனம் ஒன்றுக்கு வழங்க 2013 ஆம் ஆண்டு அமைச்சரவையின் மூலம் அனுமதியளிக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும், குறித்த வேலைகளுக்கான நோக்கெல்லையை குறைப்பதற்கும் குறித்த துறைசார்ந்தோர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு குறித்த திட்டத்தில் சில மாற்றங்களை மேற் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனால் 23.93 பில்லியன் ரூபாய்களை சேமிக்கக் கூடியதாகவும் காணப்பட்டது. எனினும் குறித்த சீன நிர்வனம் குறித்த மாற்றங்களுக்கு இணங்கவில்லை. இதனால் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கருத்திட்ட வேலையை துரிதமாகவும் இடையூறில்லாமலும் அடைவதன் பொருட்டு வேலைகளுக்கான நோக்கெல்லையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களான

1. போலியகொடை – புத்தளம் வீதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இடைமாறினை நீக்குதல்.
2. உள்ளக நான்கு ஒழுங்கைகள் கொண்ட கடுகதிப்பாதையாக நிர்மாணித்தல்
ஆகிய மாற்றங்களை செயற்படுத்தி ஒப்பந்த தொகையின் 14.84மூ ஆன அதாவது ரூ9.9 பில்லியன் தொகையினை சேமிப்பதனூடாக வெளிச் சுற்றவட்ட நெடுஞ்சாலை பிரிவு 111 ஆன கெரவலபிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான பகுதிக்கான நிர்மாண வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டம் ஆகியவற்றில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 41)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டம் ஆகியவற்றில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனையாளர்கள் பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் சமர்ப்பிப்பதற்கு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் வட மத்திய மாகாணம் மற்றும் வட மேல் மாகாணங்களில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 42)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் வட மத்திய மாகாணம் மற்றும் வட மேல் மாகாணங்களில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனையாளர்கள் பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் சமர்ப்பிப்பதற்கு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்~;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. 2016 வரவு செலவு திட்டத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 46)

பதில் நிதி அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட 2016 வரவு செலவு திட்டத்திற்கான உத்தேச பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி,

1. 2016 ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தினை சமர்ப்பித்தல் (முதலாம் வாசிப்பு) – 2015-10-23
2. வரவு செலவுத்திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு) – 2015-11-20
3. இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் (14 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது)
4. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு – 2015-12-08
5. குழுநிலை விவாதம் (12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது)
6. மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு (2015-12-22)