பிரதான உதவிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல 05)

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களை ஒன்றிணைத்து கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் வியாபாரம் தொடர்பான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவியாக 38 யூரோ மில்லியன் ரூபாவினையும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு தொழில்நுட்ப உதவிகளுக்காக வேண்டி 5.7 யூரோ மில்லியன் தொகை உட்பட மொத்தமாக 43.7 மில்லியன் யூரோ மில்லியன் நிதியினை நன்கொடையாக வழங்க ஐரோப்பிய சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டங்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே குறித்த இரு நிதியுதவியையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒப்பந்தங்களை மேற் கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் எனும் ரிதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் மூலம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. ஆட்களை பதிவு செய்தலை இலத்திரனியற்படுத்தல் மற்றும் தேசிய பிரஜைகளின் பெயர்ப்பட்டியலை தயாரித்தல் (விடய இல. 07)

1968 ஆம் ஆண்டு 32ஆம் இலக்க ஆட்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் ஆட்களை பதிவு செய்தல் தொடர்பான அதிகாரம் ஆட்பதிவு திணைக்களத்திடம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களினால் தடைப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 வருடங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கு உரித்தான அனைத்து பிரஜைக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையை தேவையான திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்துவதற்கு உள்விவகார மற்றும் வட மத்திய மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. பிராந்தியக் கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை வலுப்படுத்துதல் (விடய இல. 13)

பிராந்திய மட்டத்தில் உற்பத்தி செயன்முறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் பிரதேச கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அரச காணிகளில் 29 கைத்தொழில் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் கைத்தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மிகவும் எளிதான முறையில் திருத்தியமைப்பதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் குத்தகை பணத்தை அறவிடும் செயன்முறை ஒன்றினை அறிமுகம் செய்வதற்கு காணி அமைச்சர் கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன அவர்கள் மற்றும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிசாத் பதியூதீன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட உதவியளித்தல் பற்றிய BIMSTEC சமவாயம் (விடய இல. 10)

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தின் பங்கோக் நகரில் இடம்பெற்ற பங்காளாதேஸ், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் BIMSTEC சமவாயத்தின் பயங்கரவாத விரோத மற்றும் சர்வதேச குற்றச்செயல்கள் தொடர்பில் ஒன்றிணைந்த செயற்குழுவின் ஏழாவது கூட்டத்தில் அங்கத்துவ நாடுகள் மத்தியில் இணக்கம் காணப்பட்டது. அதனடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாதிட நீதிஅமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. Pre – Trial Proceduresக்காக நடைமுறை ஒன்றை வரைதல் (விடய இல. 11)

வழக்கு விசாரணையின் போது ஏற்படும் காலத்தாமதத்தின் காரணமாக பொது மக்கள் மத்தியில் நீதிமன்றம் தொடர்பில் நம்பிக்கை அற்று போயுள்ளது. இதனால் பாரிய பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக வேண்டி பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் பாரியளவிலான வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்ட வண்ணமே காணப்படுகின்றன. அதனடிப்படையில் குறித்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு Pre – Trial Procedures ஒன்றை கொண்டு வருவதற்கு நீதிஅமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கையில் தடைசெய்யட்ட ஊக்கமருந்து பாவனையை தடுக்கும் நோக்கில் அதனை நடைமுறைப்படுத்த கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 14)

குறித்த கட்டிடத்தை 237 மில்லியன் ரூபா செலவில் சுகததாஸ விளையாட்டரங்கு வளாகத்தில் அந்நிறுவன தொகுதியின் தலைமையகத்தை அமைப்பதற்கும் அதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் விளையாட்டமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கொள்கை அபிவிருத்தி காரியாலயம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 15)

கொள்கை வகுத்தல், அதனை வரையறுத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவைக்கு ஒத்துழைப்பதற்காக வேண்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பாதுகாப்பு சேவை கட்டளையிடல் மற்றும் உயர் பதவி நிலைக் கல்லூரியின் மாணவ அதிகரிகளுக்காக தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இரு மாடிகளை கொண்ட 03 கட்டிடங்களை நிர்மாணித்தல் (விடய இல. 17)

குறித்த கல்லூரியில் கற்கை நெறிகளை தொடரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகரிகளுக்கு உயர் தரத்திலான தங்குமிட வசதிகள் இக்கல்லூரியில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இக்கல்லூரியில் கற்கைகளை தொடரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு உயர் தரத்திலான தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்காக வேண்டி 120 மில்லியன் ரூபா செலவில் இரு மாடிகளை கொண்ட கட்டிடங்கள் மூன்றினை அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. களனி ஆற்றின் மேல் புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் அமைந்துள்ள தானியங்கி மோட்டார் வாகன பொறியியல் பயிற்சி நிறுவனத்திற்கான கட்டிடங்களை மீள் நீர்மானித்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் (விடய இல. 18)

இலங்கை அரசாங்கமானது களனி ஆற்றுக்கு மேலாக புதிய பாலம் நிர்மாணிக்கும் கருத்திட்டத்திற்கான செலவின் நிமித்தம் ஜப்பான் இன்டர்நெசனல் கோப்பரேசன் ஏஜன்சியிடமிருந்து 35,020 மில்லியன் ஜப்பானிய யென்னைக் கடனாகப் பெற்றுள்ளது. . இக்கருத்திட்டத்தினால் அவ்விடத்தில் அமைந்துள்ள தானியங்கி மோட்டார் வாகன பொறியியல் பயிற்சி நிறுவனம் பாதிக்கப்படுகின்றது. இதனால் குறித்த பயிற்சி நிர்வன கட்டிடங்களை மீள் நிர்மாணித்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றை ஒப்பந்தத்தை 1,539.8 மில்லியன் ரூபாவுக்கு வழங்குவதற்கு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளில் மண்சரிவினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்தமளித்தல் (விடய இல. 19)

சர்வதேச அபிவிருத்தி சங்கத்தினால் நிதியளிக்கப்படும் காலநிலை மீட்டெழுச்சி மேம்பாட்டு கருத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளில் மண்சரிவினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் நிர்மாண மேற்பார்வை போன்றவற்றின் ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்தமளித்தல் முறையினூடாக 146.17 மில்லின் ரூபா தொகைக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2016 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டுத் சட்டமூலம்(விடய இல. 22)

2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட ஏற்பாடுகள் 2016 – 2018 நடுத்தர காலத்தில் கிடைப்பனவிலுள்ள மொத்த வளங்களை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2016 ஆம் ஆண்டிற்கான மொத்த செலவீனம் 3,138மில்லியன் ரூபாய்களாகும். அதே போன்று நடைமுறையிலுள்ள அறவீட்டுக் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு மானியங்கள் உள்ளடங்களான வருமானம் ஏறக்குறைய 1,789 மில்லியன்களாகும். இந்த வகையில் 2016 வரவு செலவு திட்டத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கொழும்பு மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் பழுது பார்த்தல் வேலைகளுக்காக அந்நீதிமன்றங்களை வேறோர் இடத்தில் தாபிப்பதற்காத் தற்காலிக கட்டடங்களை நிர்மாணித்தல் (விடய இல. 23)

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத் தொகுதியினுள் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டங்கள் பிரித்தானியா ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பழமை வாய்ந்தவையாகும். கொழும்பு மேல் நீதிமன்றத் தொகுதியை பழுதுபார்ப்பதற்காக பீ.சீ.சீ லங்கா காணியில் நிர்மாணிக்கப்படுகின்ற தற்காலிக கட்டடங்களுக்காக வரியின்றி 87.7 மில்லியன் தொகையினை செலவிடுவதற்கும், குறித்த நிர்மாண ஒப்பந்தத்தை திறந்த விலை மனுக்களைக் கோருதலின்றி இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவிற்கு ஒப்படைப்பதற்கு நீதியமைச்சர் கௌரவ கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்கென புதிய 04 மாடிக் கட்டடத் தொகுதியொன்றினை நிர்மாணித்தல் (விடய இல. 24)

தற்போதைய அமைச்சின் வளாகத்தில் இயங்குகின்ற பிரதான கட்டிடங்களை தவிர முறையாக தாபிக்கப்படாத பல தற்காலிக கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய 04 மாடிக் கட்டிடம் ஒன்றை இவ்வமைச்சிக்காக அமைப்பதற்கு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ஆர். ஏம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தின் சுருக்கம் (விடய இல. 25)

குறித்த திட்டத்தை மேலும் ஆறு மாத காலத்துக்கு தொடர அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதனால் எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நிவர்த்திப்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்பில் பொருளாதார முகாமைத்துவ தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பிரதமரின் செயலாளரின் தலைமையில் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ அர்ஜுன ரனதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2015 செப்டெம்பர் 27 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின் துண்டிப்பு தொடர்பான ஆரம்ப அறிக்கை (விடய இல. 27)

2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு 23.53 அளவில் நாடளாவிய ரீதியில் ஒரேணடியாக மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பான ஆரம்ப அறிக்கை விடய அமைச்சரினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. இதன்படி காலநிலை மாற்றங்களால் மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக மின்சார கேள்வியான வழமையானதை விட இரவு வேளையில் குறைவாக காணப்பட்டமையால் சிறிய நீர் மின் நிலையம், காற்று வலு போன்ற புத்தாக்க மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிப்பால் முறைமையில் ஏற்பட்ட சமனற்ற சீரற்ற நிலை காரணமாகவே மின் துண்டிப்பு ஏற்பட்டது என்பதாகும். இது தொடர்பில் பக்கச்சார்பின்றி பரிசீலனை நடாத்துவதற்கும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படாது இருப்பதற்கும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காகவும், நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கும் இத்துறையில் பிரபல்யம் மிக்கவர்களை கொண்ட சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கும், அதன் அறிக்கையை மூன்று வாரத்துக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் மூலம் கௌரவ அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

16. காணி, வீடு மற்றும் குடியிருப்பொன்றின் உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் புதிய மாதிரிக் கிராம வேலைத்திட்டம் (விடய இல. 28)

தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள பங்கேற்பு அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட “சகலருக்கும் வீடுகள்” எனும் வீ;டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் காரணமாக கடந்த சில மாதங்களில் வீடுகளை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க ஏற்பாடுகளை செய்தது. இதற்கமைய காணி, வீடு மற்றும் குடியிருப்பொன்றின் உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் புதிய மாதிரிக் கிராம வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் உத்தேசித்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் 38 வீடமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. ஒரு திட்டத்தில் 25 வீடுகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு வீட்டுக்கு 250,000 ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்தமாக இவ்வேலைத்திட்டத்துக்கு 240 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக வேண்டி வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது