01.அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாத்தல் (விடய இல 06)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் அந்நிர்வாகம் தொடர்பில் நிறைவேற்று அதிகாரத்துடன் தொழிற்படும் அமைச்சரவைஇ பாராளுமன்றத்திற்கு கூட்டுப் பொறுப்புடையது மற்றும் அங்கு எழுப்பப்டும் கேள்விகளுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளது என அரசியல் யாப்பின் 42(2) ம் பிரிவூ குறிப்பிடுகின்றது.

அது எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் அச் சம்பிரதாயத்திற்கு கட்டுப்படாமல் அமைச்சரவை தன்னிச்சையாக செயற்பட்டமையை காணலாம். இதனால் நாட்டின் நல்லாட்சிக்கு அவசரமாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்களை உரிய நேரத்திற்கு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படாமல் இருக்க கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


01. அனைத்து அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் ஒன்றை செய்து கொள்ள வேண்டும்.
02. அமைச்சரவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய ஒழுக்க கோவையொன்றை வரையறுக்க அமைச்சர்கள் உள்ளடங்கிய அமைச்சுக் குழுவொன்றை நியமிப்பதுடன்இ அவர்களினால் ஒரு மாத காலத்துக்குள் அது தொடர்பான ஒழுக்கக் கோவை முன்வைக்க வேண்டி இருப்பதுடன் குறித்த கால பகுதிக்குள்ளேயே அதனை அமைச்சரவையில் அங்கீகரித்தல்.
அதனடிப்படையில் அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பதாக இவ் அமைச்சரவை சந்திப்பின் போது உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


02. கியோதோ அமைப்பின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்களை குறைத்து கொள்வது தொடர்பில் இலங்கையின் அங்கீகாரத்தை முன்மொழிதல் (விடய இல. 10)
கியோதோ அமைப்பின் முதல் இணைப்பு காலப்பிரிவாக 2008 – 2012 என்பதை ஒத்துழைப்பு நாடுகள் வரையறுத்தன. எனினும் அக்காலப்பகுதியில் அவ்வமைப்பின் நோக்கமான 1990 ஆம் ஆண்டில் தொழிற்சாலைகளினால் வெளியிடப்படும் நச்சு வாயூ அளவை குறைந்தது 5.2 சதவீதத்தாலேனும் குறைக்க வேண்டும் என்ற அம்சம் நிறைவேறாத நிலையில் 2012 ஆம் ஆண்டு கடார் நாட்டில் நடைபெற்ற அவ்வமைப்பின் எட்டாவது சம்மேளனத்தில் அவ்வமைப்பு இரண்டாவது காலப்பிரிவாகவூம் தொழிற்பட இணக்கம் தெரிவித்தன. இரண்டாவது காலப்பிரிவின் நோக்கமாக 1990 ஆம் ஆண்டில் தொழிற்சாலைகளினால் வெளியிடப்படும் நச்சு வாயூ அளவை குறைந்தது 18 சதவீதத்தாலேனும் 2012 – 2030 காலப்பிரிவிற்குள் குறைக்க வேண்டும் அன வரையறுக்கப்பட்டது.
இதனடிப்படையில் கியோதோ அமைப்பின் இரண்டாம் காலப்பிரிவினை பலப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவூ வழங்கும் என்பது தொடர்பில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


03. வலிப்பு நோய் வைத்தியாசாலை மற்றம் சுகாதாரப் பாதுகாப்பு நிலையக் கருத்திட்டம் மீதான மேலதிக நிதியிடல் (விடய இல. 13)
வலிப்பு நோய் வைத்தியசாலை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிலையக் கருத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 75 மில்லியன் சவூ+தி அரேபிய ரியால் கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை ஜனநாயகக் குடியரசின் அரசாங்கம் மற்றும் அபிவிருத்திக்கான சவூ+தி நிதியம் என்பன 2008 மார்ச் 26 ஆம் திகதியன்று ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளன. இவ்வேலைத்திட்டத்தின் 90.5 சதவீத வேலைகள் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 2015 டிசம்பர் மாதத்தில் வைத்தியசாலையினை சிகிச்சை நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கும் நோக்கில்இ மருத்துவ உபகரணங்கள்இ வைத்தியசாலைக்கான மரத் தளபாடங்கள் ஆகியவற்றின் பெறுகை நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அபிவிருத்திக்கான சவூ+தி நிதியத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகை கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை. ஆதன் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் அபிவிருத்திக்கான சவூ+தி நிர்வனத்தினால் 12.0 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மேலதிக கடன் தொகையொன்றை வழங்குவதற்கு உடன்பாட்டைத் தெரிவித்தது. எனவே இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


04. 2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவூசெய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 15)
1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இறப்பத்தாட்சி படுத்தும் அதிகாரத்தை பதிவத்தாட்சி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் பயங்கரவாத தாக்குதல்இ மக்கள் புரட்சி மற்றும் இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் திடீர் மரணம் சம்பவிக்கும் நபர்களின் உடலினை இனங்கண்டுக் கொள்ள முடியாத போது அவர்களினை பதிவூ செய்வது தொடர்பான நடைமுறைகள் குறித்த சட்டத்தில் உள்வாங்கப்பட வில்லை. இதற்கு சிறந்த தீர்வாகவே 2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பத்தாட்சிப்படுத்தும் (தற்காலிக நடைமுறை) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் சில காரணங்களால் குறித்த நபர் மரணிக்கவில்லை என குடும்பத்தார் தெரிவிக்கும் போது மேற்படி காணாமல் மரணமாக அதனை பதிவூ செய்ய முடியாது. இதனால் மரணித்தவர்களின் குடும்பத்தாருக்கு கிடைக்கபட வேண்டிய உரித்துகள் எவற்றையூம் பெற்றுக் கொள் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் இது தொடர்பில் சர்வதேச நாடுகளில் வழங்கப்படுகின்ற காணாமல் போன நபர் அல்லது மரணித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் “காணாமல் போயூள்ளதாக உறுதிப்படுத்தும் சான்றிதழ் (ஊநசவகைஇஉயவந ழக யூடிளநன்உந) மற்றும் அதற்கு ஒப்பான சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு ஏதுவாக அமையூம் படி 2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பத்தாட்சிபடுத்தும் (தற்காலிக நடைமுறை) சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு உள்விவகார அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


05. பசளைக் கொள்வனவூ – 2015 (நவம்பர் மாதம் விநியோகித்தல்) (விடய இல. 18)
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்காக விவசாயிகள் மத்தியில் விநியோகிப்பதற்கு தேவையான பசளையினை அமைச்சரவை மூலம் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிலையியல் குழுவின் சிபார்சின் படி ஒப்பந்தத்தினை வழங்க விவசாய அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


06. “வன ரோபா” தேசிய மர நடுகை நிகழ்ச்சி (விடய இல. 21)
இலங்கையில் காடுகளின் அளவூ குறைதல் நாம் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை தேசிய மர நடுகை மாதம் ஒன்றை பெயரிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
முதல் வாரம் - தலைப்பு: “வன அரன – ரெகவரன”
இரண்டாம் வாரம் - தலைப்பு: “ஜன ஹிசட்ட – துரு செவன”
மூன்றாம் வாரம் - தலைப்பு: “துரு கெபகரு – அபி நிரதுரு”
நுக்ன்காம் வாரம் - தலைப்பு: “வன அரனட்ட – ஜன சரன”
இவ்வாறு குறித்த மாதத்தின் செயற்திட்டங்களை முன்னெடுக்க மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


07. சமூக ஒருமைப்பாட்டுக்கான ஒத்துழைப்பை பலப்படுத்தல் மற்றும் வளர்ந்துவரும் பிராந்தியங்களில் நியாயமான உயர் பொருளாதார வளர்ச்சியொன்றை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள உதவி உடன்படிக்கையைத் திருத்துதல் (விடய இல. 24)
குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்க டொலர் 3இ490இ000 இனால் பங்களிப்புத் தொகையை அதிகரிப்பதற்கும்இ நிகழ்ச்சித் திட்டத்தின் பெயரை திருத்துவதற்கும்இ “சமூக ஒருமைப்பாட்டுக்கான ஒத்துழைப்பை பலப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின்” பொருட்டு கைச்சாதிடப்பட்ட உதவி உடன்படிக்கை திருத்துவதற்கும்இ குறித்த திட்டத்திற்காக வேண்டி அமெரிக்க டொலர் 14.71 மில்லியன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கும் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


08. 2015 சிறுபோக நெல் அறுவடையினை முகாமைத்துவம் செய்தல் (விடய இல. 25)
2015-09-09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது மேற் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி 2015 சிறுபோக நெல் கொள்வனவூ தொடர்பில் விவசாயிகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க நிதியமைச்சரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


09. ஹெம்மாதகம நீர் வழங்கல் செயற்றிட்டம் (விடய இல. 26)
3303.26 மில்லியன் இலங்கை அரசாங்க நிதியையூம் 81.96 வெளிநாட்டு நிதியையூம் கொண்டு மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுளள்து. குறித்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவ+ப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


10. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரித்தல் (விடய இல. 27)
குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15 ஆம் திகதியூடன் நிறைவூக்கு வருகின்றது. எனவே இது தொடர்பான ஒப்பந்தத்தை மேலும் 06 மாதத்துக்கு அதிகரிக்க துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.


11. கௌரவ அமைச்சர்களுக்கான ஆலோசகர்களை நியமித்தல் (விடய இல. 28)
கௌரவ அமைச்சர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களுக்கான ஊதியத்தினை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை செயலாளரின் மூலம் சில ஆலோசனைகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.