01. “பிரசங்கனிய சேவா விபூசனிய/ பதக்கம்” வழங்குவது தொடர்பில் பொது நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தல் (விடய இல 07)

சிரேஸ்ட முப்படை உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய சபையினால் முன்வைக்கப்பட்ட சிபார்சுக்கு இணங்க, குறித்த பாதுகாப்பு வீரர்களினால் நாட்டிற்கு ஆற்றிய சேவையை கருத்திற் கொண்டு, அவர்களுக்கு “பிரசங்கனிய சேவா விபூசனிய/பதக்கம்” வழங்குவதற்கு புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரிதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. கிரிநொப்ஸ் வல்லா (Grynopswalla) தாவர இனத்தின் ஏற்றுமதியை ஒழுங்குமுறைப்படுத்தல் (விடய இல. 08)

கிரிநொப்ஸ் வல்லா தாவரத்தை பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கை கடுமையாக அமுலாக்கபடுகின்ற அதே வேளை, வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயிரிடப்படுகின்ற குறித்த தாவரத்தை, ஏற்புடைய அதிகாரியால் வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரத்தின் கீழ் தம்வசம் வைத்திருத்தல், மற்றும் ஏற்றிச் செல்லலின் பொருட்டு குறிப்பிட்ட தாவரங்களை பயிரிடுகின்றவர்களுக்காக அனுமதி வழங்குதல் தொடர்பில் ஏற்புடைய தரப்பினர்களான வன பாதுகாப்புத் திணைக்களம், வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றம் உயிர் பல்வகைத்தன்மை செயலகத்தின் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி அவர்களது இணக்கப்பாட்டின் படி தயாரிக்கப்பட்ட அறிக்கையை நடைமுறைப்படுத்த மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரிதியில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. ஜப்பானிய மனித வள அபிவிருத்திப் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2015 (விடய இல. 09)

இலங்கையின் நிறைவேற்று மட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜப்பானில் முதன்மை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் முதுமானிப் பட்டக் கற்கை நெறியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் ஜப்பானிய அரசாங்கத்தினால் வழமை போலவே இவ்வருடமும் 90 உத்தியோகத்தர்களுக்கு குறித்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்குறித்த உத்தியோகத்தர்களுக்கு வசதியளிக்குத் நோக்குடன் ஜப்பானிய அரசாங்கம் 245 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கு முன் வந்துள்ளது. இது தொடர்பான நன்கொடை உடன்படிக்கை ஒன்றை மேற் கொள்வதற்கு கொள்கை திட்டமிடல், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. ராஜகிரிய, கணேமுல்ல மற்றும் பொல்கஹவெல மேம் பாலங்களை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம் (விடய இல. 12)

ராஜகிரிய பகுதியில் 04 வழிகளைக் கொண்ட மேம்பாலம் ஒன்றை நிறுவுவதற்கும், கணேமுல்ல மற்றும் பொல்கஹவெல பகுதிகளில் 02 வழிகளைக் கொண்ட இரண்டு மேம்பாலங்களை அமைப்பதற்கும் தேவையான நிதியினை ஸ்பைன் நாட்டின் BBVA வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த வங்கியுடன் உடன்படிக்கை ஒன்றை மேற் கொள்வதற்கு கொள்கை திட்டமிடல், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. 2015 சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் (விடய இல. 14 மற்றும் 50)
2015 சிறு போகத்தின் போது கீரி சம்பா மற்றும் சம்பா ரக நெல் கிலோ கிராம் ஒன்றுக்கு 50 ரூபாவும், நாடு ரக நெல்லுக்கு கிலோ கிராம் ஒன்றுக்கு 45 ரூபாவும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த திட்டம் முறையாக நடைபெறுகின்றதா என்பதை உறுதிசெய்யும் நோக்கில் அதனை கண்கானிக்கவென நிதியமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. இலங்கை அரசாங்கத்திற்காக தேசிய தரவு நிலையமொன்றை நிறுவுதல் (விடய இல. 15)

அரசாங்கமானது தனது பிரஜைகளுக்காக பணியாற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும் இலத்திரனியல் வழிவகைகள் மீது கூடியளவில் தங்கியிருக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலைமைகளில் அரசாங்கமானது தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் தகுந்த அனுகுமுறையாக இலங்கை அரசாங்கத்திற்காக தேசிய தரவு நிலையமொன்றை நிறுவுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. தேயிலை கொழுந்து கிலோ ஒன்றுக்காக 80 ரூபாய் உத்தரவாத விலையொன்றினை நிர்ணயித்தல் (விடய இல. 18)

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேயிலை கொழுந்து கிலோ ஒன்றுக்காக 80 ரூபா விலையை உத்தேச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்து செல்வதற்காக வேண்டி பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றம் துப்புறவேற்பாடு செயற்றிட்டத்தின் மீள் கட்டுமானத்திற்கான மேலதிக பண தேவை தொடர்பானது (விடய இல. 22)

குறித்த பிரதேசத்தில் நீர் வழங்கல் மற்றும் துப்புறவேற்பாட்டு செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு தொகை நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் மிகுதியை AFD பிரான்ஸ் இடமிருந்தும் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நீர் வழங்கல் மற்றும் துப்புறவேற்பாட்டு செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு தொகை நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், யாழ்ப்பாணத்தில் மலக்கழிவு கருத்திட்டத்திற்கான நிதியை பெற்றுக் கொள்ளவும் AFD உடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தவும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. பத்தரமுல்லையில் அமைந்துள்ள காணித்துண்டினை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்தல் (விடய இல. 23)

சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தை வேறோரு இடத்திற்கு கொண்டு செல்ல தேவை ஏற்பட்டுல்லதால், அதனை பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள 1 ½ ஹெக்டேயர் காணியில் அமைக்க தீர்மானித்துள்ளது. இதற்காக வேண்டி குறித்த காணியை 50 வருட கால குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. கொழும்புத் துறைமுகத் திடலில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட கொழும்பு பவர் தனியார் கம்பனிக்குச் சொந்தமான 60 மெகா வொட்ஸ் மின்சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரத்தைக் இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்தல் (விடய இல. 24)

கொழும்புத் துறைமுகத் திடலில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட கொழும்பு பவர் தனியார் கம்பனிக்குச் சொந்தமான 60 மெகா வொட்ஸ் மின்சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரத்தைக் இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்த கால எல்லை 2015-06-30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. குறித்த ஒப்பந்தத்தின் படி 641 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தி இலங்கை மின்சார சபைக்கு அதன் அதிகார தத்துவத்தை உரித்தளிப்பதற்கு மின்வலு சக்தி அமைச்சர் கௌரவ பாட்டாலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. தேசிய இரத்த மாற்று சேவைகள் சட்டம் (விடய இல. 27)

தற்போது முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை மேற் கொண்டு இரத்த மாற்று சேவையின் சட்டமூலத்திற்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 படுக்கைகளைக் கொண்ட வாட்டு கட்டிடத் தொகுதிக்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கல் (விடய இல. 28)

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வரி உள்ளடங்களாக 109.5 மில்லியன் ரூபா மொத்தச் செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 200 படுக்கைகளைக் கொண்ட வாட்டு கட்டிடத் தொகுதிக்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற் கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. ஆசிய பிராந்தியத்திற்கான உற்பத்தித்திறன் அமைப்புடன் 2015 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட சர்வதேச பயிற்சி வேலையரங்கு (விடய இல. 29)

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-13 ஆம் திகதி வரையான நாட்களில் “விவசாய உற்பத்திகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான பெறுமதி சேர்த்தல்” என்ற தலைப்பிலான ஒரு வேலைத்திட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கும் அதனுடன் தொடர்புடைய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14.உலர் வலய பழ வர்க்கங்களுக்கான சர்வதேச அமைப்பின் 06 ஆவது மாநாட்டை இலங்கையில் நடத்துதல் (விடய இல. 30)

ஐக்கிய நாடுகளின் உலர் வலய பழ வர்க்கங்களுக்கான சர்வதேச அமைப்பின 06 ஆவது பொது மாநாட்டை 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03-06 ஆம் திகதி வரையான நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கும் அதற்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்வதற்கும் அதே நேரம் அந்த மாநாட்டை உத்தேச குறித்த தினங்களில் நடத்துவதற்கும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15.இலங்கை பரீட்சை திணைக்கள சூழலில் பல் துறை கட்டிடம் ஒன்றை நிர்மானித்தல் (விடய இல. 35)

குறித்த பல் துறை கட்டிடத்தை அமைப்பதற்கு பொறியியல் துறை தொடர்பான மத்திய உப குழுவின் மூலம் வரையறுக்கப்பட்ட 615 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிப்பதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. கொரிய குடியரசின் வேலை வாய்ப்பு நிமித்தம் பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் இலங்கை மற்றும் கொரிய குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 36)

கொரிய குடியரசின் வேலை வாய்ப்பு நிமித்தம் பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் கொரிய குடியரசின் தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சு மற்றும் இலங்கை அரசின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட வெளி நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வேறுபாடுகளையும் முறையடிப்பது தொடர்பான புரிந்துணர்வு 20 (1) அரசியல் யாப்பு திருத்தம் (விடய இல. 37)

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வேறுபாடுகளையும் முறையடிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேண்டுகோளின் பிரகாரம் புரிந்துணர்வு 20 (1)கீழ் தேவைகள் ஏற்படும் வகையில் வருடாந்த கூட்டங்களை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும் என்ற திருத்தத்தை இலங்கையிலும் முறையாக நடைமுறைப்படுத்த மகளிர் விவகார அமைச்சர் கௌரவ சந்திரானி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

18.ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட மீனின உற்பத்தி ஏற்றுமதியினை அகற்றுவதற்கு இலங்கையினால் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் (விடய இல. 41)

குறித்த ஏற்றுமதி தடை தொடர்பில் இலங்கை மீது பணிக்கப்பட்ட 36 இலக்குகளில் 30 இலக்குகள் இலங்கை அரசாங்கத்தினால் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இலக்குகள் வெகு விரைவில் பூர்த்தியாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டுள்ளன. குறித்த முன்னேற்றங்கள் தொடர்பில் சம கால இடைவெளிகளில் ஐரோப்பிய சங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாகவும் மீன் பிடி மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்க தகவல்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுளன்ளதுடன் 2016 ஆம் ஆண்டளவில் குறித்த தடை நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

19. சப்புகஸ்கந்தை மின்னுற்பத்தி நிலையத்திற்கு 2015/2016 ஆம் ஆண்டுகளுக்கு அவசியமான உராய்வு நீக்கி எண்ணெய்களைக் கொள்வனவு செய்தல் (விடய இல. 46)

இலங்கை மின்சார சபையின் சப்புஸ்கந்தை மின்னுற்பத்தி நிலையம் 18 மெகா வொட் சக்தி உற்பத்திக் கொள்ளவுடைய 04 மின்பிப்பாக்கி இயந்திரங்களையும் மற்றும் 10 மெகா வொட் மின்சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய 08 மின் பிறப்பாக்கி இயந்திரங்களையும் கொண்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கிப் பிரிவின் மூலம் 2015ஃ2016 வரையான ஆண்டு காலப் பகுதிக்கு 1.1 மில்லியன் லீற்றர் உராய்வு நீக்கி எண்ணெய் அவசியம் என இனங்காணப்பட்டுள்ளது. குறித்த உராய்வு நீக்கி எண்ணெய்யெய் கொள்வனவு செய்வதற்கான கேள்வி விலை மனுக்கள் அழைக்கப்பட்டது. இதனை அமைச்சரவை நியமித்த கொள்வனவு பற்றிய நிலையியல் குழுவினது சிபார்சின் கீழ் ஒப்படைக்க மின்வலு சக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

20. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய தாதியர் விடுதி ஒன்றை நிர்மானித்தல் (விடய இல. 47)

வட மாகாணத்திலுள்ள மக்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையினூடாக சகல பிரிவுகளினூடாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் சிறப்பாக வழங்கப்படுகின்றது. 1750 உறுப்பினர்களைக் கொண்ட பணியாளர் தொகுதி இச்சேவைகளை வழங்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பணியாளர் தொகுதியில் 407 பேர் தாதிய அளுவலர்கள் ஆவர். அவர்களுக்கான போதிய தங்குமிட வசதிகள் இல்லாததன் காரணமாக அவர்கள் பல சிக்கல்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக வைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள புதிய 03 மாடி கட்டிடத்தை குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பயன்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

21. கிளினிக் கட்டிடத்தை விரிவாக்குதல் (11ம் கட்டம்) – பொது வைத்தியசாலை களுத்துறை (விடய இல. 48)

நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான களுத்துறை பொது வைத்தியசாலையில் இடவசதி போதியளவு இல்லாமை, நாளாந்த கிளினிக் சேவைகள் மற்றும் நோய் பராமரிப்பு சேவைகளை மேற் கொண்டு செல்வதற்கும் விரிவாக்குவதற்கும் தடையாக உள்ளது. களுத்துறை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு உயர் சேவையினை வழங்குவதற்காக இந்த கிளினிக் கட்டிடம் மேலும் மேம்படுத்துவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவின் தீர்மானத்திற் கேற்ப வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

22. நகர புரவர – தொடர்மாடி வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்தல் - 2015 (விடய இல. 49)

மேற் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 2015 க்கான தொடர்மாடி வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்காக கூட்டாட்சி முகாமைத்துவ அதிகார சபைக்கு 80 மில்லியன் ரூபா ஆன ஏற்பாடுகள் பொதுத் திறைசேரியினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளின் கீழ் கூட்டாட்சி முகாமைத்துவ அதிகார சபையினால் 03 வீடமைப்புக் கருத்திட்டங்களை நவீனமயப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மான கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைப்பதற்கு வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

23. தேயிலை சக்தி நிதியம் மறுசீரமைத்தல் (விடய இல. 52)

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேயிலை சக்தி நிதியம், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் வாதம் செய்யும் சக்தியை பலப்படுத்தும் அடிப்படை நோக்காகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு 47 இலக்கமுடைய சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தேயிலை சக்தி நிதியத்தின் மூலம் சுய நட்டம் நிலை குறைத்தல் நோக்காகக் கொண்டு நிறுவனம் மறுசீரமைக்கும் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பிரதான அலுவலகத்தின் மற்றும் தொழிற்சாலைகளின் ஆளனிகள் குறைத்தல், கொழுந்து பெறுதல் குறைந்த நிலையிலுள்ள தொழிற்சாலைகள் குத்தகைக் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் நவீனமயப்படுத்தல் மற்றம் எதிர் வேலை மூலதனம் வழங்குதல் என்ற தேவைகள் பூர்த்திச் செய்த பின்னர் இலாபகரமான முறையில் நடாத்துச் செல்லும் நோக்கமாக தேவையான நிதியினை திறைசேரி மூலம் தேயிலை சக்தி நிதியத்திடம் ஒதுக்கப்பட பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

24. அமரபுர சமயப் பேரவையின் ஸ்ரீ தம்மரக்வித்த சமயப் பேரவையின் வணக்கத்துக்குரிய பொறுப்பாளரும், வடக்கு – கிழக்கு, தம்மன்கடுவ மாகாணங்களின் பிரதம சங்கநாயக்கவும், திம்புலாகல ஆரண்யவின் சேனாசனாதிபதியான அதி வணக்கத்துக்குரிய ஸ்ரீ தம்மரகித்த வன்சலன்கர அனுவஜ்ஜக மல்தெனிய ஜினலங்கர தேரரின் பூதவுடலினை அரச அனுசரனையுடன் நடாத்துதல் (விடய இல. 53)

அமரபுர சமயப் பேரவையின் ஸ்ரீ தம்மரக்வித்த சமயப் பேரவையின் வணக்கத்துக்குரிய பொறுப்பாளரும், வடக்கு – கிழக்கு, தம்மன்கடுவ மாகாணங்களின் பிரதம சங்கநாயக்கவும், திம்புலாகல ஆரண்யவின் சேனாசனாதிபதியான அதி வணக்கத்துக்குரிய ஸ்ரீ தம்மரகித்த வன்சலன்கர அனுவஜ்ஜக மல்தெனிய ஜினலங்கர தேரரின் பூதவுடலினை அரச அனுசரனையுடன் திம்புலாகலயில் நடாத்துவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

25. பாராளுமன்ற தேர்தல் - 2015 காலப்பகுதியில் பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் மூலம் தமது கட்சியின் அல்லது தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச வாகனங்களை பயன்படுத்துதல். (விடய இல. 54)

பாராளுமன்ற தேர்தல் - 2015 காலப்பகுதியில் பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் மூலம் தமது கட்சியின் அல்லது தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச வாகனங்களை பயன்படுத்துவதற்கு குறித்த அமைச்சுக்கு அதற்கு அறவிடப்படும் தொகையை வழங்க வேண்டும். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சியின் செயலாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது. அதனடிப்படையில் குறித்த தொகையினை அமைச்சரவையின் மூலம் நிர்ணியிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டிக் கொண்டார். இதற்கிணங்க நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. யோசனைகள்

1. குறித்த வாகனத்துக்காக வேண்டி மாதாந்தம் 100,000 ரூபா அறவிடப்படும்.
2. குறித்த வாகனத்துக்கான பெற்றோலிய செலவு குறித்த நபரால் கவனிக்கப்பட வேண்டும்.
3. குறித்த நடவடிக்கைகளுக்காக வேண்டி விமானம் அல்லது உலங்கு வானூர்தி பாவிக்கப்படுவதாயின் அதற்கான முழு செலவும் குறித்த நபரே கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
4. அரச வாகனங்களுக்கான பணத்தை குறித்த அமைச்சுக்கோ அல்லது திணைக்களத்துக்கோ வழங்குவதுடன் விமானம் அல்லது உலங்கு வானூர்தி பாவிக்கப்படுவதாயின் அதற்கான பணத்தை குறித்த நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.