2018.09.11 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்


01. மத்திய தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடமைப்புக் கடன் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 09ஆவது விடயம்)

மத்திய தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தில் முதல் முறையாக வீடொன்றைப்பெற்றுக் கொள்ளும் அரச மற்றும் தனியார் ஆகிய இரண்டு பிரிவுகளைச்சேர்ந்த மத்திய தர வருமான பயனாளிகளுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக நிவாரண கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான மத்திய வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடமைப்பு கடன்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தக் கடன் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக முன்னர் இருந்த வயதெல்லைக்குப் பதிலாக வங்கியினால் வீடமைப்புக் கடனை வழங்கும் போது பொதுவாக கடைப்பிடிக்கப்படும் வயதெல்லையை கவனத்தில் கொண்டும் தனியார்த்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்களின் போதும் வீட்டை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் பயனாளிகளின் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கேற்ற வகையில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பரிந்துரைத்திருந்த வகையில் இந்த வேலைத் திட்டத்தில் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான மாதாந்த வருமான அளவை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


02. மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்தல். (நிகழ்ச்சி நிரலில் 11 ஆவது விடயம்)

மட்டக்களப்பு பொது நூலகம் செயல்பட்டுவரும் 50 வருடம் பழைமை வாய்ந்த கட்டித்திற்கு பதிலாக புதிய கட்டிடம் ஒன்றுக்கான நிர்மாணப் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் தேவைப்படும் 169.97 மில்லியன் ரூபா நிதி 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.நேர்மையான சமூகம் ஒன்றுக்காக நிலையான தருமகோட்பாடுகளைக்கொண்ட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 15 ஆவது விடயம்)


கிராமம், விகாரை என்ற எண்ணக்கருவை மிகவும் வலுவுள்ளதான வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்குடனான நல்லொலுக்கத்தை மதிக்கும் பொருளாதார ரீதியில் வலுவான சமூகம் ஒன்றுடான முறையொன்றை உருவாக்கும் நோக்குடன் விகாரயைக் கேந்திரமாகக் கொண்டு பேண்தகு நேர்மையான வேலைத்திட்டம் புத்தசாசன அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தற்போதைய சமூகத்தினால் கவனத்தில் கொள்ளப்படாமலிருக்கும் வரலாற்றிலிருந்து நிலவி வரும் பௌத்த கோட்பாட்டு நடைமுறைகள், கலாசாரம், எண்ணக்கருவுக்கு அமைவாக கிராமத்தில் உள்ள விகாரையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ்க்கையை வடிவமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வருடத்தில் 50 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத் திட்டத்தில் வெற்றியை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 250 கிராமங்களில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுவதுடன் ஏனைய மத வழிப்பாட்டுத்தலங்களை கேந்திரமாகக் கொண்டு இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சை தெளிவுப்படுத்துவதற்கு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


04. புத்த ஜயந்தி திரிபிட்டக தொடர் நூலை மீள அச்சிடும் பணிகளை புத்த சாசன அமைச்சின் மூலம் மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 16 ஆவது விடயம்)


2500 சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு பாலி திரிபிட்டகவை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 1989 ஆம் ஆண்டளவில் இந்த நூலின் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த நூலை மிகவும் முறையான வகையில் அச்சிட்டு வெளியிடுவதற்கு புத்தசாசன அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக திரிபிட்டக என்ற நூலைத் திருத்தி அச்சிடும் பொறுப்பு புத்தசாசன அமைச்சிடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள்; சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


05. இலங்கை போக்குவரத்துச் சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2005 ஆம் ஆண்டின் இலக்கம் 27 இன் கீழான இலங்கை போக்குவரத்துச் சபையின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 18 ஆவது விடயம்)

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கிடைக்க வேண்டிய நாளாந்த வருமானத்தில் குறிப்பிடத்தக்க தொகை பல்வேறு தவறான செயற்பாடுகளினால் இழக்கப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையைத் தடுப்பதன் மூலம் அதன் வருமானத்தை அதிகரிப்பதற்காக தேவையான திருத்தத்தை உள்வாங்குவதன் மூலம் 2005 ஆம் ஆண்டின் இலக்கம் 27 இன் கீழான இலங்கை போக்குவரத்துச் சபை சட்டத்தை திருத்துவதற்காக திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட திருத்த சட்ட வரைவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


06. தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நாடு தழுவிய வேலைத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 20 விடயம்)


பொது மக்களின் தகவல் உரிமையை உறுதி செய்த நாடுகள் மத்தியில் ஒன்றினைந்துள்ள இலங்கை உலகின் மூன்றாவது சிறந்த தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டத்துக்கு உரிமை கோரியுள்ளது. இதற்கமைவாக 2018 ஆம் ஆண்டை பொது மக்கள் தெளிவுபடுத்தும் ஆண்டாக பெயரிட்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதியில் இடம்பெறும் தகவகல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சர்வதேச தினத்துக்கு அமைவாக செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையிலான கால எல்லையை தகவல் அறியும் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் பொது மக்களின் நலன் கருதி தவல் உரிமையப் பயன்படுத்தும் முறை குறித்து பொது மக்களுக்கு தெளிவுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக இந்தவேலைத் திட்டத்தின் கீழ் கிராமத்துக்கு தகவல் உரிமை என்ற பெயரில் தகவல்களை அறிந்துகொள்ளும் சட்டங்கள் தொடர்பாக நடமாடும் சேவைரயை நடைமுறைப்படுத்துவதற்கும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இது தொடர்பாக பல்வேறு போட்டிகளின் மூலம் பல்வேறு பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


07. வசந்தம் டிவி தொலைக்காட்சி அலைவரிசை உள்ளடக்கிய வலயத்தை மேலும் விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 21 ஆவது விடயம்)


தமிழ்மொழி பேசும் பொதுமக்களுக்காக சுயாதீன தொலைக்காட்சி ஊடான வலைப்பின்னலினால் வசந்தம் டிவி தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு இதன் முதற் கட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் பார்வையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இது யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம் மற்றும் கொக்காவில் பிரதேசம் வரையில் விரிவுப்படுத்தப்பட்டது. இதற்கமைவாக நாடுமுழுவதிலும் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த அலைவரிசையின் நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்கான வசதிகளை செய்யும் வகையில் 304 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி ஓளிபரப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


08. தேசிய சுகாதார ஆய்வு சபையொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்)

சுகாதார ஆய்வு ஒழுங்குறுத்தல் இணைப்பு கண்காணிப்பு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்திற்காக தேசிய மட்டத்தில் தேசிய சுகாதார ஆய்வு சபையை அமைப்பதற்குத் தேவையான சட்டத்தை வகுக்குமாறு திருத்த சட்டத்தை வகுப்பதற்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரியை போதனா வைத்தியசாலையாக மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 22 ஆவது விடயம்)

சப்;ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்தியபீடத்தில் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 75 பட்டதாரிகளைக்கொண்ட முதலாவது வைத்திய மாணவர்களைக்கொண்ட குழுவை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சியை வழங்குவதற்காக இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரியை போதனா வைத்தியசாலையாக மேம்படுத்த வேண்;டியுள்ளது. இதற்கமைவாக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வைத்திய பீடத்தின் இணை நிறுவன வைத்தியசாலை என்ற ரீதியில் செயல்படும் வகையில் இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரி போதனா வைத்தியசாலையாக மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 71 ஆவது தேசிய தின விழாவை ஏற்பாடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 30 ஆவது விடயம்)

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறும் 71 ஆவது தேசிய தின விழாவுக்கான நிகழ்;ச்சி நிரலை தயார் செய்து தேவையான ஏற்பாடுகள் மற்றும் முன்னெடுப்பதற்காக கௌரவ பிரதமரின் தலைமைத்துவத்தைக் கொண்ட 13 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட துணை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் சாம்பல் சேர்க்கப்படும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலை சுற்றாடலுக்கு பொருத்தமான வகையில் அப்புறப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்படும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலின் காரணமாக அருகிலுள்ள கிராம மக்களுக்கும் சுற்றாடலுக்கும் ஏற்படக் கூடிய பாதகமான தாக்கத்தை தவிர்ப்பதற்காக அவற்றை விரைவாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு நடவடிக்கையாக இந்த சாம்பலை பயன்படுத்தி சுற்றாடலுக்கு பொருத்தமான தயாரிப்புக்காக இந்த சாம்பலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாம்பலைப் பயன்படுத்தி செங்கல்லை தயாரிப்பதற்கான பரிந்துரைக்கு அமைவாக இந்த சாம்பலை சுற்றாடல் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தாமல் அனல்மின் நிலையத்தில் சாம்பல் பகுதி முற்றத்தில் அமைந்துள்ள சுற்றாடல் பகுதியில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக சாம்பலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த சாம்பலை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கப்படுவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக இந்த சாம்பலை சுற்றாடலில் அப்புறப்படுத்தாமல் சாம்பல் சேர்ம்மப்பகுதியில் உள்ள சுற்றாடலில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்குவதற்கும் . அப்புறப்படுத்துவதற்காகவுமாக மின் சக்தி மற்றும புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. தேசிய கடற்றொழில் மற்றும் நீர் உயிரின உற்பத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய திருத்த சட்ட மூலம் (நிகழ்ச்சி நிரலில் 42 ஆவது வியடம்)

தற்போது நடைமுறையிலுள்ள 1996 ஆம் ஆண்டின் இலக்கம் 2 இன் கீழான கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தில் இதுவரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன. அத்தோடு தற்பொழுது பொருளாதாரம், சமூகம் வாழ்க்கை மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக்கு அமைவாக இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக கடற்றொழில் ஒழுங்குறுத்தல் காப்புறுதி மற்றும் அபிவிருத்திக்கான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி புதிய திருத்த சட்டமூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்சா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அனைவருக்கும் நிழல் என்ற கிராம சக்தி மாதிரி கிராமதிட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தென்மாகாணங்களில் 1200 வீடுகளை நிர்மாணித்தல் (நிகழ்;ச்சி நிரலில் 47 ஆவது விடயம்)

அரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராம வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த கிராமங்களை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் மேலும் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது, அதேபோன்று இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. மாதிரி கிராம வீடமைப்பு நடைமுறையின் மூலம் சூ10ரிய சக்தி சேணத்தின் உள்ளீட்டு நிரப்பிய அணைத்துணி (பெனல்); யை பொருத்துவதற்கான திட்டம் (நிகழ்;ச்சி நிரலில் 48 ஆவது விடயம்)

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராமங்களில் குடியிருக்கும் பொது மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சூரியசக்தி திட்டத்தின் கீழ் தனியார் தொழில்முயற்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாதிரிக் கிராமங்களில் சூரிய சக்தி பெனல்களை பொருத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளரை அடையாளம் காண்பதற்காக பரிந்துரைகளை கோருவதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை ஒப்படைத்தல் தொடர்பாக இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கத்திற்கிடையிலான உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 50 ஆவது விடயம்)

தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை ஒப்படைப்பது தொடர்பாக இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோறளை சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. மிருகங்களை பலியிடும் பூஜையை தடுப்பதற்கான சட்டத்தை விதித்தல் (நிகழ்ச்சி நிரலில் 57ஆவது விடயம்)

பழைமை வாய்ந்த மத சம்பிரதாயங்கள் என்ற ரீதியில் கருதப்படும் மிருகப்பலி பூஜை நடத்துதல் இன்னும் சில கோயில்களில் பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பெரும்பாலான இந்து பக்தர்கள் இதில் உடன்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்து ஆலயங்களில் மிருகப்பலி பூஜை வழிபாடு நடப்படுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கைக்குள் ஆலயங்களில் அல்லது அதன் எல்லைப் பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் மிருக மற்றும் பறவை பலிப்பூஜையை தடை செய்வதற்கான சட்டத்;;;தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தின் அடிப்படையில் பொருத்தமான திருத்த சட்டத்தை தயாரிக்குமாறு திருத்த சட்ட மூலம் தயாரிப்புக்கு ஆலோசனை வழங்குவதற்காக மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. சொத்துக்களை பதிவு செய்யும் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒன்றிணைந்த ஈ லேன் ரெஜிஸ்டரி திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 60 ஆவது விடயம்)

சொத்துக்களை பதிவு செய்யும் பொழுது காணி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு வர்த்தக வசதி தொடர்பிலான சுற்றெண்ணில் இலங்கையின் தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஈ லேன் ரெஜிஸ்டாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சொத்துக்களை பதிவு செய்வதற்காக தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைய 51 நாட்கள் முடிவடையும் வரையில் அதற்காக ஒன்பது நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஈலேன் ரெஜிஸ்டாரி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த கால எல்லையை 5 தினங்கள் வரையும் இரண்டு நடைமுறை வரையிலும் குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைத் திட்டத்தை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வகையில் நிதி ஒதுக்கீPடு செய்யப்படவுள்ளது, இதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. படகு தயாரிப்புக்கான ஒழுங்குறுத்தல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 61 ஆவது விடயம்)

இலங்கையில் படகு தயாரிப்பு தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்காக ஒழுங்குறுத்தல் கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் தற்பொழுது உள்ள படகு தயாரிப்பாளர்களுக்கு தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் நோக்கில் வெலிகம, கப்பரதொட்ட, படகு வெள்ளோட்ட நிலையம், லிஸ்சும மஹா மற்றும் செப்பனிடும் வசதிகளை நிர்மாணித்தல் இறங்குதுறையை நிர்மாணித்தலுக்கான சாத்தியக்கூற்றறிக்கைக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது, இதற்கமைவாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. பண்டாரவளை, தியத்தலாவ, மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் கோபுர கட்டமைப்பை நிர்மாணித்தல் (நிகழ்;ச்சி நிரலில் 66 ஆவது விடயம்)

உமா ஓயா பல்லின அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குடியிருப்பாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பண்டாரவளை, தியத்தலாவ மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உமா ஓயா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் டையபரா நீர்த்தேக்கம் இந்தத் திட்டத்தின் நீர்த்தாக்குதல் என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்பொழுது டையபரா நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன் இந்த நீர்த்தேக்கத்தில் நீரை நிரப்புவதற்கு முன்னர் கோபுரம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதினால் இதற்கான ஒப்பந்தத்தை பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை பணியகம் ஃ மத்தியஃ பொறியியலாளர் சேவை நிறுவனத்திடம் மேற்கொள்வதற்காகவும் அதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காகவும் நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளை நெதர்லாந்து நிதியயுதவியின் கீழ் அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)

அம்பாந்தோட்டை நுவரெலியா வைத்தியசாலைகளின் நிர்மாணித்தல் மற்றும் அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் நெதர்லாந்து நிதியத்தின் ஒத்துழைப்பின் கீழ் மேற்கொள்வதற்கு 2012 ஆம் ஆண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இந்தத் திட்டம் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமையின் காரணமாக இந்த வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களுக்காக செலவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவையை விரைவாக நிறைவேற்றுவததை கவனத்தில் கொண்டு இந்த வைத்தியசாலைகளுக்கான குறிப்பிட்ட விபரக்குறிப்புகளுக்கு அமைவாக நவீன உபகரணங்களை விநியோகிப்பதற்கு தேவையான அனுமதி மற்றும் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. மத்துகம, காலி, பெலியத்த, மாத்தறை, மற்றும் பல்லேகல, கிரீட்; மின் துணை வலைப்பின்னல் நிலையங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 20 ஆவது விடயம்)

சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் மின் வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ள தலா 01 மெகாவற் வீதம் 90 சூரிய சக்தி மி;ன் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புடன் இணைத்துக் கொள்வதற்காக நிர்மாணிக்கப்பட வேண்டிய கிரீட் துணை நிலையங்கள் மத்தியில் மத்துகம, காலி, பெலியத்த, மாத்தறை, மற்றும் பல்லேகல ஆகிய ஐந்து துணை கிரீட் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக்கான நிலையியற் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுக்கமைய சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,

22. ரஜரட்ட கொழும்பு, ருஹூனு மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 71 ஆவது விடயம்)

அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை முறையாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இவற்றில் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ரஜரட்ட கொழும்பு, ருகுணு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கமைவாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்துக்கான வி;ரிவுரை மண்டபம் அடங்கலாக இரசாயன கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல், மற்றும் இதில் மாணவர் தங்குமிட வசதி, சுற்றாடலில் உணவு சாலையை நிர்மாணித்தல், கொழும்பு பல்கலைக்கழத்தின் கலைப்பீடத்துக்கான புதிய கட்டடத் தொகுதியில் முதல் கட்டுமாணப்பணியை மேற்கொள்ளுதல், கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய சுகாதார பாதுகாப்பு விஞ்ஞானப் பீடத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்திச் செய்தல், மற்றும் ருகுணு பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதாரபீடத்தின் கட்டிடத் தொகுதியில் முதல் கட்டுமாணப் பணியை நிர்மாணித்தல், மற்றும் அதன் பிரதான கட்டிடத் தொகுதி வளவில் செப்பனிடுதல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளுக்காக 3690.42 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயாதாச ராஜபக்ச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை அமைப்பதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 72 ஆவது விடயம்)

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை 5015 மில்லியன் ரூபா செலவில் இரத்திபுரி பெரியாஸ்பத்திரிக்கு அருகாமையில் உள்ள 20 ஏக்கர் நிலப் பரப்பில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இந்த வைத்திய பீடத்தின் பணிகளை விரைவான ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அத்தியாவசி வைத்திய மற்றும் சமாந்தரமான வைத்தியபீடத்திற்கான மருத்துவ கட்டிடத்தை நிர்மாணித்தல் மற்றும் அதற்குத் தேவையான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. பதுளை, செங்கலடி வீதியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் டெம்பிட்டியவிலிருந்து செங்கலடி வரையிலான 27.75 கிலோ மீட்டர் நீளமான வீதியை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 76 ஆவது விடயம்)

பதுளை செங்கலடி வீதியை மேம்படுத்தும் திட்டத்தின் மூன்று முக்கிய திட்டங்களுக்கான அபிவிருத்திக்காக சவூதி நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதி பயனபடுத்தப்பட்டது. இதன் மூன்றாவது கட்டமாக பதுளை செங்கலடி வீதியில் 249.8 கிலோ மீட்டர் தொடக்கம் 277.55 வரையிலான டெம்பிட்டிய தொடக்கம் செங்கவடி வரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய 2837.43 மில்லியன் ரூபா வரி அற்ற தொகைக்கு மகா இன்ஞ்சினியரின் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. பெண்கள் மத்தியில் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறைகளில் தொழில் வாய்ப்பு வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 82 ஆவது விடயம்)

கைத்தொழில் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறைகளில் மகளிர் பயிற்று பயனாளிகளில் மத்தியில் சுயதொழில்வாய்ப்புகளை மேம்படுத்தும் விடயத்தில் இதுவரையில் ஆண்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள தொழில்துறைக்கு பெண்களை ஈடுபடுத்துதல், மற்றும் வளர்ந்து வரும் தொழில் சந்தர்ப்பத்துக்கு பெண்களின் பிரவேசத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி; மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிலேன் இன்டர்நெசனல் அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டம் (நிகழ்ச்சி நிரலில் 87 ஆவது விடயம்)

பயங்கரவாதத்தில் மற்றும் பயங்கரவாதத்துடனான செயற்பாடுகளில் இருந்து இலங்கை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிரனருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு திருத்த சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த திருத்த சட்டத்துக்காக மேலும் செய்யப்பட வேண்டிய திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்வதற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. தலைமைத்தவ ஆற்றலுடன் இளைஞர்களை ஊக்குவித்தல் (நிகழ்;ச்சி நிரலில் 88 ஆவது விடயம்)

இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் பேண்தகு அபிவிருத்தி பிரிவின் மூலம் இலங்கையின் நிலைபேறா அபிவிருத்தி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்புடன் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், தலைமைத்துவ ஆற்றலின் மூலம் இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்ரை மூன்று முக்கிய கட்டங்களில் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதியை 2019 – 2021 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு கட்டமைப்பின் கீழ் பெற்றுக் கொள்வதற்காக மேன்தகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. அம்பாந்தோட்டை மாவட்த்தில் மாதிதிக் கிராமங்களில் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக கிராம பாலங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 89 விடயம்)

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அடிப்படை வசதிகளைக்கொண்ட கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்களின் வீடமைப்பு பயனாளிகளுக்கு நகர பொது வசதிகளை இலகுவாக அடையக் கூடிய வகையில் வலஸ்முல்ல பல்லேகந்த, வீதியூடான பாலம் மெதகொட, கும்புக்முல்ல, ஊறுபொக்க ஓய ஊடான பாலம் தல்லுன்ன மற்றும் அதுமெலலென பாலம் மற்றும் பாலபெறகம பாலத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நான்கு பணிகள் நகமு புரவர வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.